Published:Updated:

சென்னை: ரூ.10,000 மதிப்பிலான செல்போனுக்காக ரௌடி கொலை! - சிக்கிய நண்பர்

சென்னையில் செல்போனை வாங்கிவிட்டு பணம் கொடுக்காத ரௌடியை அவரின் நண்பர் கொலை செய்திருக்கிறார்.

சென்னை, மணலி எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குட்டி என்கிற ராஜசேகர். பிரபல ரௌடியான குட்டி, சின்ன சேக்காடு அருகே பார்த்தசாரதி 6-வது தெருவில் அவரின் நண்பர் விக்னேஷ் உட்பட சிலருடன் நேற்று முந்தினம் இரவு மது அருந்தினார். அப்போது போதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதில் குட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து மணலி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கொலை
கொலை

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் குட்டியின் சடலத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். குட்டியுடன் மது அருந்தியது யாரென்று போலீஸார் விசாரித்தனர். சம்பவத்தன்று குட்டியின் நண்பனான விக்னேஷ் என்பவரும் மது அருந்தியது தெரியவந்தது. அதனால் விக்னேஷிடம் விசாரித்தபோது குட்டியைக் கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். பின்னர் விக்னேஷை போலீஸார் கைதுசெய்து விசாரித்தபோது கொலைக்கான காரணம் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட குட்டிமீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த மாதம்தான் செல்போன் திருட்டு வழக்கில் சிறைக்குச் சென்று வந்தார். சிறைக்குச் செல்வதற்கு முன்பு விக்னேஷிடம் குட்டி, 10,000 ரூபாய் மதிப்புள்ள செல்போன் ஒன்றை வாங்கியிருக்கிறார். ஆனால் அதற்குரிய பணத்தை குட்டி கொடுக்கவில்லை.

குடிபோதையில் தினமும் சித்ரவதை: சகோதரனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த மனைவி கைது!
கைது!
கைது!

சிறைக்குச் சென்று வந்த பிறகு குட்டியிடம் பணத்தை விக்னேஷ் மது அருந்தும்போது கேட்டிருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஆத்திரமடைந்த விக்னேஷ் ரௌடி குட்டியைக் கொலை செய்திருக்கிறார்" என்றனர்.

10,000 ரூபாய் மதிப்புள்ள செல்போனுக்காக ரௌடியை அவரின் நண்பர் கொலை செய்த சம்பவம் வடசென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு