Published:Updated:

`கொலையில் முடிந்த சிறுவயதுப் பகை!' -மைத்துனர் கண்முன்னால் சென்னை ரௌடிக்கு நேர்ந்த கொடூரம்

கொலை செய்யப்பட்ட ரமேஷ்
கொலை செய்யப்பட்ட ரமேஷ்

ரெட்டேரி ரமேஷ், அபினாஷ் ஆகியோருக்கும் மாதவரம் வஜ்ரவேல் நகர் கும்பலுக்கும் இடையே சிறுவயது முதலே மோதல் இருந்துவந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

சென்னை கொளத்தூர் கங்கை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் என்கிற ரெட்டேரி ரமேஷ் (23). இவரின் மைத்துனர் அபினாஷ் (24). இவர், எம்.ஜி.ஆர் நகரில் குடியிருந்து வருகிறார். இவர்கள் இருவரும் புறா கூண்டு அடிக்கும் வேலை செய்து வந்தனர். நேற்று இரவு ரமேஷ், அபினாஷ், இவர்களின் நண்பர் சரண் ஆகியோர் கொளத்தூர், சத்யசாய் நகர், மெயின் ரோடு வழியாக நடந்து வந்துகொண்டிருந்தனர்.

சடலமாக ரமேஷ்
சடலமாக ரமேஷ்

அப்போது 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அபினாஷிடம் தகராறு செய்தது. அதை ரெட்டேரி ரமேஷ் தட்டிக்கேட்டார். அதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. பின்னர் அந்தக் கும்பல் ரமேஷை சரமாரியாக வெட்டியது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அபினாஷ், சரண் ஆகியோர் தடுத்துள்ளனர். அப்போது அவர்களுக்கும் வெட்டு விழுந்தது. ரமேஷை குறிவைத்து வெட்டியதால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதையடுத்து, அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. இந்தச் சம்பவம் குறித்து கொளத்தூர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேலன் தலைமையிலான போலீஸார் அங்கு வந்தனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அபினாஷ், சரண் ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரமேஷின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

முதலிரவில் கொல்லப்பட்ட மணமகள்! - திருவள்ளூர் மணமகனின் அதிர்ச்சிப் பின்னணி
கொலை
கொலை
மாதிரிப் படம்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம். அப்போது ரமேஷை வெட்டிக் கொலை செய்தது மாதவரம் வஜ்ரவேல் நகரைச் சேர்ந்த 4 பேர் எனத் தெரியவந்தது. ரமேஷ், அபினாஷ் ஆகியோரின் மாமியார் வீடு மாதவரம், வஜ்ரவேல் நகரில் உள்ளது. அங்கு ரமேஷ், அபினாஷ் செல்லும்போது அதே பகுதியைச் சேர்ந்த சரவணன், பாரதி, வெல்டிங் சுரேஷ், ஹைதர் அலி ஆகியோருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்துவந்துள்ளது.

12-ம் தேதி இரவு 9 மணியளவில் அபினாஷுக்கும் ஹைதர்அலிக்கும் முதலில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு ஹைதர்அலி கும்பல், ரமேஷ், அபினாஷ், சரண் ஆகியோரை வெட்டியுள்ளது. இதில் ரமேஷ் இறந்துவிட அபினாஷ், ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் சரண், தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களைத் தேடிவருகிறோம்" என்றனர்.

கொலை
கொலை
மாதிரிப் படம்
`பொய் சொன்னேன், கணவர் கொலை செய்துவிட்டார்'- ரவுடி கொலையில் சிக்கிய அம்மு வாக்குமூலம்!

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில் ``கொலை செய்யப்பட்ட ரமேஷ் என்கிற ரெட்டேரி ரமேஷ் மீது காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொளத்தூர் காவல் நிலைய சரித்திர பதிவேட்டில் ரமேஷின் பெயர் உள்ளது. சி பிரிவு ரௌடியான ரெட்டேரி ரமேஷ் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளது. ரெட்டேரி ரமேஷ், அபினாஷ் ஆகியோருக்கும் மாதவரம் வஜ்ரவேல் நகர் கும்பலுக்கும் இடையே சிறுவயது முதலே மோதல் இருந்துவந்த தகவல் கிடைத்துள்ளது. அதுதொடர்பாக விசாரித்துவருகிறோம். சிறுவயது பகை, முன்விரோதம் ஆகியவைதான் கொலையில் முடிந்துள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு