Published:Updated:

சென்னை: சாவு வீட்டில் கஞ்சா போதை, தகராறு! - கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட ஐ.சி.எஃப் ரெளடி

கொலை செய்யப்பட்ட ரௌடி கருணா
கொலை செய்யப்பட்ட ரௌடி கருணா

சென்னையில் சாவு வீட்டில் கஞ்சா போதையில் தகராறு செய்த ரௌடியை ஒரு மர்மக் கும்பல் இரவில் கொலை செய்ததது.

சென்னை, ஐ.சி.எஃப் அம்பேத்கர் நகர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவரின் மகன் கருணா என்ற கருணாகரன் (35). இவர்மீது ஐ.சி.எஃப் காவல் நிலையம், வில்லிவாக்கம் காவல் நிலையம் ஆகியவற்றில் ஒரு கொலை வழக்கு, கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி, திருட்டு என 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஐ.சி.எஃப் பகுதியில் ரெளடியாக வலம்வந்த கருணா, அதே பகுதியில் ஒரு சாவு வீட்டுக்குச் சென்றிருக்கிறார். கஞ்சா போதையிலிருந்த கருணா, அங்கு தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.

கொலை
கொலை
Representational Image

பின்னர் வீட்டுக்கு வந்த கருணா, இரவு 7 மணியளவில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவரின் வீட்டுக்கு வந்த சிலர், கருணாவை அழைத்திருக்கிறார்கள். வெளியில் வந்த கருணாவைச் சுற்றி வளைத்த அந்தக் கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. கத்தியால் அவரைக் குத்தியது. ரத்த வெள்ளத்தில் கருணா கீழே சரிந்தார். கருணாவின் அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதியிலுள்ளவர்கள் வெளியில் வந்தனர். அதைப் பார்த்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

பின்னர் கருணாவை மீட்ட பொதுமக்கள், அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி கருணா உயிரிழந்தார். இது குறித்து ஐ.சிஎ.ஃப் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று கருணாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

கொலை
கொலை
Representational Image

இதையடுத்து கொலை நடந்த இடத்துக்குச் சென்ற போலீஸார் அங்கு விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து ஐ.சி.எஃப் போலீஸார் கூறுகையில், ``ஐ.சி.எஃப் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி ரெளடி கருணா என்கிற கருணாகரன். இவர் குடியிருக்கும் பகுதியிலுள்ள ஜி -பிளாக்கில் சம்மனசு என்ற மூதாட்டி மரணமடைந்தார். அவரின் இறுதி ஊர்வலத்தில் கருணா கஞ்சா மற்றும் குடிபோதையில் கலாட்டா செய்திருக்கிறார். அதைத் தட்டிக்கேட்டவர்களை கருணா தாக்கியிருக்கிறார்.

பின்னர் மாலை 6:30 மணியளவில் கருணா, வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 20 வயதுடைய இளைஞர், கருணாவிடம் சாவு ஊர்வலத்தில் நடந்த தகராறு தொடர்பாக சமாதானம் பேச வெளியில் வரும்படி அழைத்திருக்கிறார். அதை நம்பி கருணாவும் வெளியில் வந்திருக்கிறார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த மேலும் சில ரெளடிகள் கத்தியை எடுத்து முகத்தில் வெட்டி கருணாவைல் கீழே தள்ளியிருக்கிறார்கள். பின்னர் கல்லைத் தூக்கி அவர் முகத்தில் போட்டுவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டார்கள்.

கொலை
கொலை
சென்னை: `அறை முழுவதும் ரத்தம்; பூட்டிய வீட்டுக்குள் பெயின்ட்டர் கொலை!' - சிக்கிய நண்பர்

ரெளடி கருணாவை முன்விரோதம் காரணமாக அதே பகுதி சி பிளாக்கைச் சேர்ந்த விஜய், ஜி பிளாக்கைச் சேர்ந்த சாலு, இ பிளாக்கைச் சேர்ந்த அசோக் -தீனா, ஷாம் மற்றும் ஜோஸ்வா ஆகியோர் கொலை செய்தது தெரியவந்திருக்கிறது. அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்து, தேடிவருகிறோம்" என்றனர்.

குடியிருப்புப் பகுதியிலேயே ரெளடி கருணா கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ஐ.சி.எஃப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு