Published:Updated:

சென்னை: திருநின்றவூர் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை?! - கோவாவில் தாளாளர் சிக்கிய பின்னணி

பள்ளி தாளாளர் வினோத்

சென்னையை அடுத்த திருநின்றவூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு கவுன்சலிங் என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டில் தாளாளர் வினோத், கோவாவில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை: திருநின்றவூர் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை?! - கோவாவில் தாளாளர் சிக்கிய பின்னணி

சென்னையை அடுத்த திருநின்றவூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு கவுன்சலிங் என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டில் தாளாளர் வினோத், கோவாவில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
பள்ளி தாளாளர் வினோத்

சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூரில் செயல்பட்டு வரும் தனியார்ப் பள்ளியின் தாளாளர் வினோத் என்பவரை கைது செய்யக்கோரி பெற்றோர்களும் மாணவ, மாணவிகளும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் சம்பவ இடத்துக்கு பட்டாபிராம் உதவி கமிஷனர் சதாசிவம் தலைமையில் போலீஸாரும் மற்றும் வருவாய் துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேரமாக நடந்த பேச்சுவார்த்தையின் காரணமாக மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அப்போது சம்பந்தப்பட்ட பள்ளி தாளாளர் வினோத் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இந்தப் பிரச்னை காரணமாக பள்ளிக்கு ஒருவாரம் விடுமுறை அளிக்கப்பட்டது.

பள்ளி தாளாளர் வினோத்
பள்ளி தாளாளர் வினோத்

இந்தநிலையில், போலீஸார் தேடிய பள்ளி தாளாளர் வினோத், வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், சமூகத்தில் என்னவெல்லாம் பிரச்னை வரும் பாரு எனவும் அது தற்போது எனக்கே வந்துள்ளதாகவும், உண்மை என்ன என தெரிந்து கொண்டு பேச வேண்டும். உண்மை என்ன என தெரியாமல் பேசுவது நியாயம் கிடையாது. இதில் சற்றும் எனக்கு உடன்பாடு இல்லை எனவும், என்னை யாரும் குறை சொல்ல முடியாது. ஏனென்றால் கடந்த 15-ம் தேதி என் மீது சந்தேகம் படும் பொழுது நான் எலிமருந்தை சாப்பிட்டு விட்டேன். என்கிறார்,

மேலும், இதுவரை நான் சாகவில்லை. என்னவென எனக்கும் தெரியவில்லை. பிறகு இரண்டு நாள் கழித்து விஷம் அருந்தினேன் அப்பொழுது நான் இறக்கவில்லை. ஏன் என தெரியவில்லை. இன்று ஏற்கனவே ஒரு கொசு மருந்தை சாப்பிட்டு விட்டேன்” எனவும் தொடர்ந்து உங்களுக்காக என வீடியோவில் பேசிக்கொண்டே வாயில் கொசு மருந்து அடித்துக் கொள்ளும் அந்த காட்சியும் அதில் பதிவாகியுள்ளது.

``இது நடிப்பு கிடையாது... ஏன் தெரியுமா? ஒவ்வொரு முறையும் பாலியல் ரீதியாக ஒருவரை முடக்க முடியும் என்றால் அது தவறு. நேர்மையாக நின்று குழந்தைகளுக்காக எத்தனையோ ஆசிரியர்கள் போராடுகிறார்கள். அந்த ஆசிரியராக நான் சாகிறேன். நான் ஒன்றும் ஆசிரியர் கிடையாது. எனக்கு அதில் விருப்பம் கிடையாது ஆனால். இன்றும் நல நல ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகள் முன்னேற வேண்டுமென பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசு பள்ளியா தனியார் பள்ளியா என எனக்கு தேவையில்லை குழந்தைகள் மீது நல்ல அன்பு வைத்துக் கொண்டு இந்த குழந்தைகள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என முன்னோக்கி வருகிற ஆசிரியர்களை நாம் இதுபோன்று கூறிக் கொண்டே இருக்கிறோம்.

சென்னை: திருநின்றவூர் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை?! - கோவாவில் தாளாளர் சிக்கிய பின்னணி

பள்ளியின் உள்ளே போய் பாருங்கள். யார் யாரை கட்டுப்படுத்துகிறார்கள் என்று. ஒரு ஆசிரியர் தன் சுய நலத்திற்காக உட்கார்ந்து கொண்டு, இது போன்ற செய்ய முடியும் என்றால் இது நியாயமே கிடையாது. சார் எனக்கு உங்கள் மீதுதான் சந்தேகம் கௌதமன் சார். நீங்கள் தான் இதை கொண்டு வந்தீர்கள் நீங்கள் தான் இதையெல்லாம் செய்தீர்கள். ஏனென்றால் அடித்துக்கூற முடியும் நீங்கதான் எல்லாத்துக்கும் காரணம். இது என் மரண வாக்குமூலம். மறுபடியும் கூறுகிறேன் இந்த சமூகம் நன்றாக இருக்க வேண்டுமென்றால் அடுத்த தலைமுறைக்கு நாம் இறங்கி நின்று வேலை செய்ய வேண்டும். நீ ஆணா பெண்ணா மூன்றாம் பாலினமா என எதுவும் இங்கு முக்கியமில்லை. நாம் இறங்கி வேலை செய்ய வேண்டும்.

பள்ளியில் போராட்டம்
பள்ளியில் போராட்டம்

சிரித்து பேசி பழகுவதால் எந்த தவறும் நடந்து விடாது. எல்லோரிடம் சிரித்து பழகி பேசுகிறோம் என்றால் இங்கு உண்மையாக இருக்க வேண்டும் என தான் பழகுகிறோம். இதை நான் சீன் காட்டுவதற்காக எல்லாம் செய்யவில்லை என் குழந்தைகளுக்கு தெரியும் 11-வது 12 வது மாணவ மாணவிகளுக்கும் இது தெரியும்.. சரி தவறு என அனைத்தும் உங்களுக்கு தெரியும். நான் சரி... தவறாக பேசாதீர்கள்” என அந்த வீடியோவில் வினோத் பேசியுள்ளார். வீடியோவை அவர் எடுக்கும்போது நடுநடுவே விஷத்தை வாயில் ஊற்றிக் கொண்டே இருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆவடி அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கோவாவில் தலைமறைவாக இருந்த வினோத்தை கைது செய்தனர். பின்னர் விசாரணை நடத்தி திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

சென்னை: திருநின்றவூர் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை?! - கோவாவில் தாளாளர் சிக்கிய பின்னணி

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மாணவிகள், பெற்றோர்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்ட பள்ளி தாளாளர் வினோத்தின் செல்போன் சிக்னல் கோவாவில் இருப்பதைக் கண்டறிந்து தனிப்படை போலீஸார் அங்குச் சென்று அவரைக் கைது செய்திருக்கிறார்கள். வினோத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்திருக்கிறோம். அப்போது கூடுதல் தகவல்கள் வெளியாகும்" என்றனர்.