Published:Updated:

சென்னை: சமூக வலைதளத்தில் மூழ்கிய மாணவி! - செமஸ்டர் தேர்வுக்கு முன் விபரீத முடிவு

மாணவி பத்மபிரியா
மாணவி பத்மபிரியா

சென்னை அம்பத்தூரில் ஆன்லைன் வகுப்புகளில் பாடங்களைப் படிக்காமல் சமூக வலைதளங்களில் நீண்டநேரம் செலவிட்ட மாணவி, திடீரென தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை, அம்பத்தூர், எம்.டி.ஹெச் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். இவரின் மனைவி தேவி. இந்தத் தம்பதியரின் ஓரே மகள் பத்மாவதி (18) . இவர், அண்ணாநகரிலுள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். பத்மாவதி வழக்கம்போல இரவு தூங்கச் சென்றார்.

மாணவி தற்கொலை
மாணவி தற்கொலை
Representational Image

நேற்று காலை அவரின் அறை திறக்கப்படவில்லை. அறைக்குள் சென்று பார்த்தபோது, பத்மாவதி தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பத்மாவதியின் பெற்றோர், தனியார் மருத்துவமனைக்கு பத்மாவதியைக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் பத்மாவதி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்த அம்பத்தூர் போலீஸார், பத்மாவதி சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், செப்டம்பர் மாதம் 24 -ம் தேதி செமஸ்டர் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் ஆன்லைன் வகுப்பை கவனிக்காமல், பத்மாவதி செல்போனில் சமூக வலைதளத்தில் அதிக நேரம் செலவழித்துவந்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

சென்னை: `நான் தற்கொலை செய்யப்போகிறேன்' - மனைவிக்கு போன் செய்துவிட்டு உயிரை மாய்த்த போலீஸ் எஸ்.ஐ
மாணவி தற்கொலை
மாணவி தற்கொலை

அதை அவரின் பெற்றோர் கண்டித்திருக்கிறார்கள். அதனால் மனமுடைந்த பத்மாவதி, தற்கொலை செய்துகொண்டார் என்று தெரியவந்திருக்கிறது. மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்திருப்பது வேதனையளிக்கிறது.

கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அம்பத்தூரில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு