Published:Updated:

சென்னை: பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை! - டீக்கடை ஊழியருக்கு 5 ஆண்டுகள் சிறை

மாணவிக்குப் பாலியல் தொல்லை
News
மாணவிக்குப் பாலியல் தொல்லை

சென்னையில் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டீக்கடை ஊழியருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் குடியிருக்கும் 15 வயது சிறுமி, கடந்த 20.9.2018-ம் தேதி ஐஸ்ஹவுஸ் பகுதியிலுள்ள பள்ளிக்குச் சென்றுவீட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியிலுள்ள டீக்கடையில் வேலை செய்த கேரளாவைச் சேர்ந்த பிரதீப் (46) என்பவர், சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரதீப்பிடம் விசாரித்தனர். பின்னர் அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தீர்ப்பு
தீர்ப்பு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்துவந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சாட்சிகளிடம் விசாரணை முடிந்த நிலையில், 15.12.2021-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் பிரதீப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 7,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை செலுத்த தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த போலீஸாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.