Published:Updated:

சென்னை: ஒரே நாளில் 2,094 வழக்குகள் - கண்ணுக்குத் தெரியாத நம்பர் பிளேட்டுகளை விற்ற 3 பேர் கைது!

நம்பர் பிளேட்கள்

சென்னையில் நடந்த சிறப்பு வாகனச் சோதனையில் 2,094 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கண்ணுக்குத் தெரியாத நம்பர் பிளேட்டுகளை விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

சென்னை: ஒரே நாளில் 2,094 வழக்குகள் - கண்ணுக்குத் தெரியாத நம்பர் பிளேட்டுகளை விற்ற 3 பேர் கைது!

சென்னையில் நடந்த சிறப்பு வாகனச் சோதனையில் 2,094 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கண்ணுக்குத் தெரியாத நம்பர் பிளேட்டுகளை விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

Published:Updated:
நம்பர் பிளேட்கள்

சென்னையில் செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. இந்தக் குற்றச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்படும் பைக்குகளின் பதிவு நம்பர்கள் போலி என்றாலும், சில பைக்குகளில் நம்பர் பிளேட்டே இல்லை என்ற தகவல் போலீஸாருக்கு தெரியவந்தது. மேலும் போக்குவரத்து விதிகளை மீறியும் நம்பர் பிளேட்களை பொருத்தியது தொடர்பாகவும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்குத் தகவல் வந்தது. அதையடுத்து, உடனடியாக சிறப்பு வாகனச் சோதனையில் ஈடுபட போக்குவரத்து போலீஸாருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் போக்குவரத்து பிரிவு போலீஸார் 27-ம் தேதி சிறப்பு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

நம்பர் பிளேட்
நம்பர் பிளேட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புனித தோமையர்மலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸார், அந்தப் பகுதியில் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள ஒரு ஸ்டிக்கர் கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பனைக்காக foldable number plate-க்கள் (ஸ்லைடிங்) விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து கடையின் உரிமையாளர் சரத்குமாரை (29) போலீஸார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் இத்தகைய நம்பர் பிளேட்டுகளை தயாரித்துக் கொடுத்த ஆலந்தூரைச் சேர்ந்த சுகுமாறன் (25) என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 18 நம்பர் பிளேட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதேபோல, பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் அண்ணாசாலை, கதீட்ரஸ் கார்டன் ரோடு பகுதியில் உள்ள ஸ்டிக்கர் கடையில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் foldable number plate-க்களை விற்பனைக்காக வைத்திருந்த கடையின் உரிமையாளர் நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் (29) என்பவரைக் கைது செய்தனர். அவருக்கு நம்பர் பிளேட்டுகளை சப்ளை செய்த ஜோஸ்வா தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடிவருகின்றனர். இந்த சிறப்பு சோதனையில் 32 நம்பர் பிளேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிகளுக்கு புறம்பாக நம்பர் பிளேட்டுகளை தயார் செய்து கொடுப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது. இந்த வகையான நம்பர் பிளேட்டுகளை பைக் ரேஸர்கள் அதிகளவில் பயன்படுத்தி வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

செய்தி குறிப்பு
செய்தி குறிப்பு

இதுதவிர சென்னை முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறி நம்பர் பிளேட்டுகளை பொருத்தியிருந்த 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சோதனையில் சிக்கின. வாகனங்களில் வந்தவர்களைப் பிடித்து விசாரித்தபோது அதில் சிலர் காதல் ஜோடி எனத் தெரியவந்தது. போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 2,094 வாகனங்கள் சிக்கின. இதையடுத்து போக்குவரத்து போலீஸார் சம்பந்தப்பட்டவர்களிடம் அபராதம் விதித்தனர்.

இதுதொடர்பாக சென்னை போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும் விபத்துகளை குறைக்கவும் பல்வேறு முயற்சிகளை போக்குவரத்து பிரிவு போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். வாகன ஓட்டிகள் தவறான வழியில் வாகனங்களை ஓட்டுவது, அதிக வேகமாக வாகனம் ஓட்டி மற்ற வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை விளைவிப்பது மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பது போன்ற போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்த நேற்று சிறப்பு வாகன சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் தவறான வழியில் வாகனம் ஓட்டியதற்காக 1,595 வழக்குகளும், வேகமாக வாகனம் ஓட்டியதற்காக 96 வழக்குகளும் அதிவேகமாக வாகனத்தை ஒட்டியதற்காக 403 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism