Published:Updated:

நடிகர் விஜய் காருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ் - காரணம் இதுதான்!

விஜய்

போக்குவரத்து விதிகளை மீறியதாக நடிகர் விஜய்யின் காருக்கு சென்னை போலீஸார் அபராதம் விதித்துள்ளனர்.

நடிகர் விஜய் காருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ் - காரணம் இதுதான்!

போக்குவரத்து விதிகளை மீறியதாக நடிகர் விஜய்யின் காருக்கு சென்னை போலீஸார் அபராதம் விதித்துள்ளனர்.

Published:Updated:
விஜய்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள பனையூரில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தினார் நடிகர் விஜய். அப்போது நடிகர் விஜய் வந்த காரை, ரசிகர்கள் செல்ஃபி எடுத்தனர். பின்னர், நிகழ்ச்சி முடிந்து நடிகர் விஜய் புறப்பட்டுச் சென்ற பிறகு அந்த காரை பின்தொடர்ந்து சென்ற ரசிகர்கள் அதை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவுசெய்தனர்.

நடிகர் விஜய் காருக்கு அபராதம்
நடிகர் விஜய் காருக்கு அபராதம்

அதையடுத்து அந்த வீடியோ வைரலானது. வீடியோவைப் பார்த்தவர்கள், நடிகர் விஜய்யின் காரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி கறுப்பு ஸ்டிக்கர் ஓட்டப்பட்டிருப்பதாக கருத்துகளைப் பதிவுசெய்தனர். அதில் நடிகர் விஜய் காரில் கறுப்பு ஸ்டிக்கர் ஓட்டியிருப்பது குறித்தும் சென்னை போக்குவரத்து போலீஸாரிடம் கேள்வி எழுப்பினார்கள் நெட்டிசன்கள். இதையடுத்து வீடியோ அடிப்படையில் நடிகர் விஜய்யின் பெயரில் உள்ள சொகுசு காருக்கு போக்குவரத்து விதிகளை மீறியதாக 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதற்கான செலான், நடிகர் விஜய்க்கு அனுப்பப்பட்டிருப்பதாக சென்னை போக்குவரத்து போலீஸார் தெரிவித்தனர்.