Published:Updated:

சென்னை: இளம்பெண்ணுடன் நட்பு - டி.வி சீரியல் நடிகர் ஓட ஓட விரட்டிக் கொலை

டி.வி சீரியல் நடிகர் செல்வரத்தினம்
டி.வி சீரியல் நடிகர் செல்வரத்தினம்

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் டி.வி சீரியல் நடிகர், வீட்டின் முன் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சென்னை எம்.ஜி.ஆர்.நகர், வள்ளல் பாரி தெருவிலுள்ள வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தவர் செல்வா என்கிற செல்வரத்தினம். இவர், தனியார் தொலைக்காட்சியில் சீரியல் நடிகராக இருந்தார். செல்வரத்தினத்துக்கு திருமணமாகி மூன்று மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் விருதுநகர் மாவட்டத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் குடியிருந்துவருகின்றனர். செல்வரத்தினம் மட்டும் தனியாக சென்னையில் தங்கியிருந்தார்.

கொலை
கொலை
representational image

செல்வரத்தினம் அடிக்கடி பெண் ஒருவரிடம் செல்போனில் நீண்டநேரம் பேசிக்கொண்டேயிருப்பார். அவருடன் நட்பாகவும் பழகிவந்தார். அதை அந்தப் பெண்ணின் கணவர் கண்டித்திருக்கிறார். இந்தநிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் செல்வரத்தினம் விருதுநகருக்குச் சென்றிருந்தபோது அந்தப் பெண்ணின் கணவருடன் தகராறு ஏற்பட்டிருக்கிறாது. இதையடுத்து சூளைக்கரை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் அனைவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தியிருக்கின்றனர்.

இந்தச் சமயத்தில்தான் தீபாவளிக்கு அடுத்தநாள் (15-ம் தேதி) காலை 6:25 மணியளவில் வீட்டின் முன் நடந்து சென்ற செல்வரத்தினத்தை ஆட்டோவில் வந்த மர்மக் கும்பல் ஓட ஓட விரட்டிக் கொலை செய்தது. இது தொடர்பாக செல்வரத்தினத்துடன் தங்கியிருந்த தனசேகர் என்பவர் எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து செல்வரத்தினத்தின் சடலத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

கொலை
கொலை
representational image
சென்னை: பிரபல ரௌடியின் மகன் ஓட ஓட விரட்டிக் கொலை - வைரலாகும் சிசிடிவி காட்சி

இந்தக் கொலை தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். விசாரணையில் கொலை நடந்த இடத்திலுள்ள சிசிடிவி கேமராக்களை கொலையாளிகள் உடைத்துவிட்டுச் சென்றது தெரியவந்தது. மேலும் செல்வரத்தினத்தைக் கொலை செய்தது அந்தப் பெண்ணின் கணவர் விஜயகுமார் மற்றும் அவரின் கூட்டாளிகள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களைப் பிடித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு