Published:Updated:

`என் மனைவியை வேலைக்கு வைக்காதே!'- வேளச்சேரி ஜோதிடருக்கு நேர்ந்த கொடூரம்

வேளச்சேரி ரயில் நிலையம்
வேளச்சேரி ரயில் நிலையம்

பெண்ணை உதவியாளராக வேலைக்கு வைத்த சென்னை வேளச்சேரி ஜோதிடர், கத்தியால் குத்தப்பட்டார். அதைத் தடுக்க வந்த அந்தப் பெண்ணுக்கும் கத்திக் குத்து விழுந்தது.

சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் நகரைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (67). இவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவர், வேளச்சேரி இன்ஸ்பெக்டர் ரஞ்சீவ் பிரின்ஸ் ஆரோனிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது. ``நான் மேற்படி முகவரியில் குடும்பமாக வசித்து வருகிறேன். நான், வேளச்சேரியில் ஜோதிட நிலையம் நடத்திவருகிறேன். என் அலுவலகத்தில் உமாமகேஸ்வரி, கடந்த 3 மாதங்களாக உதவியாளராகப் பணியாற்றிவருகிறார். உமாமகேஸ்வரிக்கும் அவரின் கணவர் ஸ்ரீதருக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்ததாகவும் அதனால்அவரை வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று ஸ்ரீதர் கண்டித்ததாகவும் என்னிடம் உமாமகேஸ்வரி கூறியிருந்தார்.

`1 லட்ச ரூபாய் பைக் 25,000; அதிர்ச்சி எஸ்.எம்.எஸ்!' - 13 டூவீலர்களோடு சிக்கிய சென்னை டிரைவர்
எஃப்.ஐ.ஆர்
எஃப்.ஐ.ஆர்

இந்தநிலையில் கடந்த 13-ம் தேதி மதியம் 1 மணியவில் உமாமகேஸ்வரியின் கணவர் ஸ்ரீதர், ஜோதிட நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் என் மனைவியை வேலைக்கு வைக்காதே எனப் பலமுறை சொல்லியும் கேட்கவில்லை எனச் சொல்லிக்கொண்டே ஸ்ரீதர் மறைத்து வைத்திருந்த கத்தியால் என் கழுத்து, முகம், கைகளில் குத்தினார். பின்னர் என்னைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோகத்தோடு எனது தலையில் கத்தியால் குத்தினார். அப்போது அதைத் தடுக்க வந்த உமாமகேஸ்வரிக்கும் வாய், கழுத்து மற்றும் கையில் கத்திக் குத்து காயங்கள் ஏற்பட்டன.

உடனே நான் வலி தாங்க முடியாமல் சம்பவ இடத்திலேயே விழுந்துவிட்டேன். சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு வருவதற்குள் ஸ்ரீதர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் என்னையும் உமாமகேஸ்வரியையும் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்" என்று கூறியுள்ளார். புகாரின்பேரில் வேளச்சேரி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஜோதிடர் அர்ஜுனன் அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீதர் மீது 294 பி, 447, 324, 307 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம்.

Vikatan
ராயப்பேட்டை அரசு மருத்துவமனை
ராயப்பேட்டை அரசு மருத்துவமனை

ஸ்ரீதரின் மனைவி உமாமகேஸ்வரி, ஜோதிடர் அர்ஜுனனிடம் ஜோதிடம் பார்க்க வந்துள்ளார். அப்போது தன்னுடைய கஷ்டத்தை கூறி வேலை கேட்டுள்ளார். உடனே உமாமகேஸ்வரியை ஜோதிடர் அர்ஜுனன் சேர்த்துள்ளார். இது, உமாமகேஸ்வரியின் கணவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் ஜோதிடர் அர்ஜுனனிடம் மனைவியை வேலையைவிட்டு நிறுத்தும்படி எச்சரித்துள்ளார். அதன்பிறகும் உமாமகேஸ்வரி வேலைக்குச் சென்றதால்தான் ஜோதிடர் அர்ஜுனை ஸ்ரீதர் கத்தியால் குத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தில் ஸ்ரீதரை கைது செய்துள்ளோம் என்றனர்.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஜோதிடர், உமா மகேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு