Published:Updated:

சென்னை: பங்குச் சந்தை முதலீடு... ஆசை வார்த்தைக் கூறி மோசடி! - தலைமறைவாக இருந்த பெண் கைது

மோசடி வழக்கில் கைதான அமுதா
News
மோசடி வழக்கில் கைதான அமுதா

பங்குச் சந்தையில் முதலீடு எனக்கூறி பல லட்சம் ரூபாயை மோசடி செய்த வழக்கில் மதுரையைச் சேர்ந்த பெண்ணை ஓராண்டுக்குப்பிறகு போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பிரபாகர். இவரிடம் சில ஆண்டுகளுக்கு முன் அமுதா என்பவர் போனில் பேசியிருக்கிறார். அப்போது அவர், தான், தி.நகரில் உள்ள பிரபல வர்த்தக நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியின் உதவியாளராக வேலைப்பார்ப்பதாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதன்பிறகு பிரபாகரிடம், குறிப்பிட்ட பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தைகளைக் கூறியிருக்கிறார். அதை நம்பிய பிரபாகர், தனக்கு தெரிந்தவர்களை அமுதா கூறிய பங்குச் சந்தையில் முதலீடு செய்யும்படி கூறியுள்ளார்.

அதனால் அவர்கள் 87 லட்சம் ரூபாய் வரை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கின்றனர். ஆனால் லாபமும் முதலீடு செய்த பணம் குறித்தும் எந்த தகவலும் இல்லை. இதையடுத்து அமுதாவிடம் முதலீடு செய்தவர்கள் விவரத்தைக் கேட்டபோதுதான் அவர்கள் கொடுத்த பணத்தை அமுதா பங்குச் சந்தையில் முதலீடு செய்யவில்லை என்று தெரியவந்தது. அதோடு முதலீடு செய்வதற்காக கொடுத்த பணத்தை அமுதா தன்னுடைய சொந்த செலவுக்கு பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து பிரபாகர், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் மூன்று பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து அமுதாவை தேடிவந்தனர். கடந்த ஓராண்டுகளாக தலைமறைவாக இருந்த அமுதாவை மதுரையில் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz