Published:Updated:

தீபாவளி சீட்டால் சிக்கல்; வாட்ஸ்அப் மூலம் தகவல் - குடும்பத்துடன் விஷம் குடித்த பெண்!

விஷம் ( சித்தரிப்புப் படம் )

சென்னையில் தீபாவளி சீட்டு நடத்திய இளைஞருக்குச் சிபாரிசு, பண உதவி செய்த பெண்ணுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அந்தப் பெண் தன் கணவர் மற்றும் குழந்தையுடன் விஷம் குடித்தார்.

தீபாவளி சீட்டால் சிக்கல்; வாட்ஸ்அப் மூலம் தகவல் - குடும்பத்துடன் விஷம் குடித்த பெண்!

சென்னையில் தீபாவளி சீட்டு நடத்திய இளைஞருக்குச் சிபாரிசு, பண உதவி செய்த பெண்ணுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அந்தப் பெண் தன் கணவர் மற்றும் குழந்தையுடன் விஷம் குடித்தார்.

Published:Updated:
விஷம் ( சித்தரிப்புப் படம் )

சென்னை விருகம்பாக்கத்தை அடுத்த சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலு (38). இவரின் மனைவி ராசி. இந்தத் தம்பதியருக்கு 12 வயதில் மகள் இருக்கிறார். இந்தத் தம்பதி கடந்த 18-ம் தேதி தாங்கள் மூவரும் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக உறவினர்களுக்கு வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பியிருக்கின்றனர். பின்னர் மூன்று பேரும் விஷம் குடித்தனர். வாட்ஸ்அப்பில் வந்த மெசேஜைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வடிவேலுவின் உறவினர்கள் உடனடியாக வடிவேலுவின் வீட்டுக்கு வந்தனர். அப்போது மூன்று பேரும் மயங்கிய நிலையில் கிடந்தனர்.

விஷம்
விஷம்

அவர்களை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் தற்கொலைக்கு முயன்ற வடிவேலுவின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``வடிவேலுவின் மனைவி ராசி, அந்தப் பகுதியில் தீபாவளி சீட்டு, மாதாந்திர சீட்டு ஆகியவற்றை நடத்திவந்துள்ளார். ராசியிடம் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலை பார்த்துவந்திருக்கிறார். இந்தச் சூழலில் அந்த இளைஞர், தனியாக சீட்டு தொழிலில் ஈடுபட்டுள்ளார். அதனால் ராசியும் தனக்குத் தெரிந்தவர்களை அந்த இளைஞரிடம் சீட்டுப் போட சிபாரிசு செய்திருக்கிறார். மேலும் இளைஞருக்குப் பண உதவியையும் ராசி செய்ததாகக் கூறப்படுகிறது.

மன விரக்தி
மன விரக்தி
சித்தரிப்புப் படம்

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞர், சீட்டுப் பணத்தைச் சரியாகக் கொடுக்கவில்லை. அதனால் இளைஞரிடம் சீட்டுப் போட்டவர்கள் ராசியிடம் பணம் கேட்டிருக்கின்றனர். மேலும், ராசிக்கு சில லட்சம் ரூபாய் வரை கடன் ஏற்பட்டுள்ளது. அதனால் மன விரக்தியடைந்த ராசி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறார். அவருடன் சேர்ந்து ராசியின் கணவர் வடிவேலு, அவரின் மகள் ஆகியோரும் விஷம் குடித்திருக்கின்றனர். தற்போது மூன்று பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சம்பந்தப்பட்ட இளைஞரிடம் விசாரணை நடத்தினால் மட்டுமே என்ன நடந்தது என்று தெரியவரும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism