Published:Updated:

சென்னை: மது அருந்திய கணவன், மனைவி - நள்ளிரவில் நடுரோட்டில் நடந்த கொலை!

கொலை
கொலை ( Representational Image )

சென்னை வேளச்சேரியில் ஒன்றாக மது அருந்திய கணவன், மனைவிக்கு இடையே நள்ளிரவில் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கணவர், மனைவியை கொலை செய்தார்.

சென்னை வேளச்சேரி அண்ணாநகர் பிளாட்பாரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் 40 வயது மதிக்கத்தக்க பெண், தலை, உடல் முழுவதும் ரத்தக்காயங்களுடன் மயங்கிக் கிடந்தார். அவ்வழியாகச் சென்றவர்கள் வேளச்சேரி காவல் நிலையத்துக்கும் ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மயங்கிக் கிடந்த பெண்ணை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

கொலை
கொலை
Representational Image

மருத்துவமனையில் அந்தப் பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர். இதையடுத்து இளம்பெண்ணின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பெண் மரணம் குறித்து வேளச்சேரி போலீஸார் விசாரித்தபோது திடுக்கிம் தகவல்கள் வெளியாகின.

சென்னை: `பாதாள சாக்கடை தகராறு; மகன் கண்முன் தந்தை கொலை’ - கணவனைக் காப்பாற்றிய மனைவி

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``வேளச்சேரி அண்ணாநகர் பிளாட்பாரத்தில் இறந்து கிடந்தவரின் பெயர் செல்வி (42). இவர் குப்பைகளைப் பொறுக்கி வாழ்க்கையை நடத்தி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செல்விக்கும் அதே பிளாட்பாரத்தில் தங்கியிருந்த பரணிதரன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு இருவரும் பிளாட்பாரத்திலேயே தங்கி, கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தனர். இருவரும் இரவில் ஒன்றாக மது அருந்துவார்கள்.

கொலை
கொலை
Representational Image

சம்பவத்தன்று இருவரும் மது அருந்திவிட்டுப் போதையில் பிளாட்பாரத்திலேயே சண்டை போட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த பரணிதரன், அருகில் கிடந்த கட்டையை எடுத்து செல்வியைத் தாக்கியுள்ளார். அதில் தலையில் காயமடைந்த செல்வி, சம்பவ இடத்திலேயே மயங்கியுள்ளார். போதையிலிருந்த பரணிதரன், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அப்போது பிளாட்பாரத்தில் மயங்கிக் கிடந்த செல்வியை மீட்டு மருத்துமனையில் சேர்த்தோம். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மனைவியைக் கொலை செய்த குற்றத்துக்காகப் பரணிதரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.

இதுதொடர்பாக, சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் பேபி நகர், கோபால் தெருவைச் சேர்ந்தவர் ஜோதிபாசு என்பவர் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, `` நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். 9-ம் தேதி இரவு 9 மணியளவில் அண்ணாநகர் பகுதியில் நடைப்பயிறசி முடித்துவிட்டு வரும்போது பிளாட்பாரத்தில் குடியிருக்கும் செல்வி, பரணிதரன் ஆகியோர் இரவு நேரத்தில் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். செல்வியை கட்டையை வைத்து பரணிதரன் அடித்தார்.

சென்னை: `பாதாள சாக்கடை தகராறு; மகன் கண்முன் தந்தை கொலை’ - கணவனைக் காப்பாற்றிய மனைவி

நான் உடனே அருகில் சென்றதும் பரணிதரன் அங்கிருந்து ஓடிவிட்டார். அதன்பிறகு நானும் சென்றுவிட்டேன். மறுநாள் காலை (10-ம் தேதி) நான் நடைபயிற்சிக்காக செல்லும்போது செல்வியின் தலை மற்றும் முகத்தில் அடிப்பட்டு சுயநினைவின்றி பிளாட்பாரத்தில் கிடந்தார். என்னிடம் தொலைபேசி இல்லாத காரணத்தால் அருகில் இருந்தவரிடம் ஆம்புலன்ஸுக்கு போன் செய்யக் கூறினேன். பின்னர் மருத்துவனைக்கு அனுப்பி செல்வியை அழைத்தச் சென்றோம். செல்வியை அடித்து மிரட்டிய பரணிதரன் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் எஸ்.ஐ விமல் 294 பி, 506 (2), 326 ஆகிய பிரிவுகளின் வழக்குபதிவு செய்து விசாரித்தார். செல்வி உயிரிழந்ததையடுத்து கொலை வழக்காக போலீஸார் மாற்றினர்.

அடுத்த கட்டுரைக்கு