Published:Updated:

``குடும்பத்தின் ஆலமரம்; நிம்மதியாக வாழவிடல!" - மருமகனால் கொல்லப்பட்ட அத்தை

கொலை செய்யப்பட்ட குணசுந்தரி
கொலை செய்யப்பட்ட குணசுந்தரி

`என்னை நிம்மதியாக வாழ விடாததால் அத்தையைக் கொலை செய்தேன்' என மருமகன் போலீஸிடம் கூறியுள்ளார்.

சென்னையை அடுத்த புழல் விநாயகபுரம் பரிமளம் நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவரின் மனைவி குணசுந்தரி (37). இவர் நேற்று கொளத்தூரில் உள்ள மருமகன் கணேசன் வீட்டில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை குறித்து கொளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேலன் வழக்கு பதிந்து விசாரித்துவருகிறார். தலைமறைவாக இருந்த கணேசன் போலீஸ் பிடியில் சிக்கினார். கொலை செய்யப்பட்ட குணசுந்தரி குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

மே மாதம் 1-ம் தேதிதான் புழல் வீட்டிலிருந்து கணேசன், கொளத்தூருக்கு குடிபெயர்ந்தார். கணேசனுக்கு தீபா சித்தி முறை என்றாலும் ஒரே வீட்டில் இருவரும் தங்கியிருப்பதை குடும்பத்தினர் விமர்சிக்கத் தொடங்கினர்.
போலீஸ்
கணேசன்
கணேசன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய கொளத்தூர் போலீஸார், ``குணசுந்தரியின் மூத்த அண்ணன் மகன் கணேசன். பெயின்டராக வேலை பார்த்து வருகிறார். குடும்பத்தின் செல்லப்பிள்ளையாக கணேசன் இருந்துள்ளார். எப்போதும் ஜாலியாக இருக்கும் கணேசனுக்கும் விழுப்புரத்தைச் சேர்ந்த அருள்செல்விக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தைகள் பிறந்தபிறகு கணேசனுக்கும் அருள்செல்விக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். குடும்பத்தில் எல்லா காரியத்தையும் முன்னின்று நடத்துபவர் குணசுந்தரி. அவர்தான் அந்தக் குடும்பத்தின் ஆலமரமாக இருந்துள்ளார். அதனால் குணசுந்தரியின் பேச்சுக்கு அவரின் குடும்பத்தினர் கட்டுப்படுவார்கள்.

மருமகன் கணேசனின் திருமண வாழ்க்கை கேள்விக் குறியானதும் அவருக்கு ஆறுதலாக குணசுந்தரி இருந்துவந்தார். குணசுந்தரிக்கு திருமணமாகாத வரை குடும்பத்தில் எந்தவித பிரச்னையும் இல்லை. கடந்த ஆண்டு அம்பத்தூரைச் சேர்ந்த சரவணன் என்பவருடன் குணசுந்தரிக்கு திருமணம் நடந்தது. அதன்பிறகு வீட்டில் பிரச்னை ஏற்படத் தொடங்கியது.

`ஊரடங்கில் நாயிடம் சிக்கிய சிறுவன்; தலையில் தையல்' - வழக்கில் சிக்கிய ஆவடி கட்டட கான்ட்ராக்டர்
கொலை
கொலை

இந்தச் சூழலில் கணேசனின் சித்தப்பாவான லோகு என்பவர் சில மாதங்களுக்கு முன் இறந்தார். அவருக்கு தீபா என்ற மனைவியும் கைக்குழந்தையும் இருந்தது. சித்தப்பாவின் மரணத்துக்குப்பிறகு தீபாவுக்கு ஆறுதலாக கணேசன் இருந்தார். இது, குடும்பத்தில் உள்ளவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் குடும்பத்தினருக்குத் தெரியாமல் மே மாதம் 1-ம் தேதிதான் புழல் வீட்டிலிருந்து கணேசன், கொளத்தூருக்கு குடிபெயர்ந்தார். கணேசனுக்கு தீபா சித்தி முறை என்றாலும் ஒரே வீட்டில் இருவரும் தங்கியிருப்பதை குடும்பத்தினர் விமர்சிக்கத் தொடங்கினர்.

இந்தத் தகவல் குணசுந்தரிக்குத் தெரிந்ததும் ஊரடங்கு அமலிருந்த நிலையிலும் அவரின் செல்வாக்கைப் பயன்படுத்தி, வாடகை கார் மூலம் கணேசன் வீட்டுக்கு வந்தார். அப்போதுதான் குணசுந்தரிக்கும் கணேசனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு அது கொலையில் முடிந்துள்ளது. அதன்பிறகு கணேசன், தலைமறைவாகிவிட்டார். வீட்டுக்குள் சென்ற குணசுந்தரி நீண்ட நேரமாகியும் வராததால் சந்தேகமடைந்து உள்ளே சென்று பார்த்தபோதுதான் அவர் கொலை செய்யப்பட்ட தகவல் வெளியில் தெரியவந்தது.

`முறை தவறிய நட்பு; மருமகனைத் தட்டிக் கேட்ட அத்தை!' -கொலையில் முடிந்த சென்னைக் கொடூரம்

குணசுந்தரியின் உடலில் டாட்டூக்கள் வரையப்பட்டுள்ளன. அதனால் குணசுந்தரியின் பின்னணி குறித்து விசாரணை நடந்தது. இந்தச் சூழலில் தலைமறைவாக இருந்த கணேசன் எங்களிடம் சிக்கினார். அவரிடம் விசாரித்தபோது `சித்தப்பாவின் மனைவி தீபாவுக்கு ஆறுதலாக நான் இருந்தது குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் கடந்த வாரத்தில் தனியாக சித்தியை அழைத்துக்கொண்டு கொளத்தூருக்கு வந்து தங்கினேன். ஆனால், அந்த வீட்டின் முகவரியையும் அத்தை குணசுந்தரி கண்டுபிடித்துவிட்டார். என்னை நிம்மதியாக வாழ விடாத ஆத்திரத்தில் அத்தையைக் கொலை செய்துவிட்டேன்' என்று கூறினார். இதையடுத்து, கணேசனைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு