Published:Updated:

`முறை தவறிய நட்பு; மருமகனைத் தட்டிக் கேட்ட அத்தை!' -கொலையில் முடிந்த சென்னைக் கொடூரம்

கொலை செய்யப்பட்ட குணசுந்தரி
கொலை செய்யப்பட்ட குணசுந்தரி

சென்னை கொளத்தூரில் முறை தவறிய நட்பை தட்டிக் கேட்ட அத்தையை அவரின் மருமகன் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

சென்னையை அடுத்த புழல் விநாயகபுரம் பரிமளம் நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவரின் மனைவி குணசுந்தரி (37). இவர் கொளத்தூர் பாலாஜி நகர், முதல் பிரதான சாலையில் கொல்லப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். குணசுந்தரியின் சடலத்தைக் கைப்பற்றிய கொளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேலன், வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகிறார்.

தலைமறைவாக இருக்கும் கணேசனிடம் விசாரித்தால்தான் உண்மை தெரியவரும். மேலும் இந்தக் கொலைக்கும் குணசுந்தரியின் சகோதரரின் மனைவிக்கும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரித்துவருகிறோம்.
போலீஸ் அதிகாரி
கொலை
கொலை
கொலை செய்யும்போது `ஆன்' ஆன செல்போன்; காட்டிக்கொடுத்த ஆடியோ! - சென்னைக் கடற்கரையில் நடந்த கொடூரம்

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``குணசுந்தரியின் அண்ணன் மகன் கணேசன் (26). இவர் கூலி வேலை செய்து வருகிறார். திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணேசனை விட்டு அவரின் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். தனியாக வசித்த கணேசனுக்கும் குணசுந்தரியின் சகோதரர் ஒருவரின் மனைவிக்கும் (சித்தி முறை) நட்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் குணசுந்தரியின் சகோதரன் இறந்துவிட்டார். அதனால், கைக்குழந்தையுடன் தவித்த குணசுந்தரியின் சகோதரரின் மனைவியும் கணேசனும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். இந்தத் தகவல் குடும்பத்தினருக்குத் தெரிந்ததும் அனைவரும் கண்டித்துள்ளனர்.

இந்தச் சூழலில்தான் குணசுந்தரி, நேற்று கணேசனைச் சந்திக்கப் புழல் பகுதியிலிருந்து கார் மூலம் கொளத்தூருக்கு வந்துள்ளார். அங்கு கணேசனிடம், `நீ ஏன் இப்படி நடந்துகொள்கிறாய். உன்னால் நம் குடும்பத்துக்குக் கெட்ட பெயர் ஏற்படுகிறது?' என்று கண்டித்துள்ளார். ` சித்தியுடன் நெருக்கமாகப் பழகாதே' என்றும் கூறியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த கணேசன், தன்னுடைய அத்தையான குணசுந்தரியைக் காய்கறிகளை வெட்டப் பயன்படுத்தும் கத்தியால் குத்தியுள்ளார்.

அதை குணசுந்தரி தடுத்தபோது அவரின் கையிலும் வெட்டு விழுந்துள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த தாக்குதலால் ரத்த வெள்ளத்தில் குணசுந்தரி உயிரிழந்தார். இதையடுத்து கணேசன் தலைமறைவாகிவிட்டார்.

`சிம்பிளாக பழகுவார்.. நல்ல மனிதர்!' -கொரோனாவால் உயிரிழந்த பாளையங்கோட்டை தி.மு.க எம்.எல்.ஏ மகன்
கணேசன்
கணேசன்

தலைமறைவாக இருக்கும் கணேசனிடம் விசாரித்தால்தான் உண்மை தெரியவரும். மேலும் இந்தக் கொலைக்கும் குணசுந்தரியின் சகோதரரின் மனைவிக்கும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரித்துவருகிறோம். குணசுந்தரியின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளோம். குடும்ப உறவுகளுக்குள் ஏற்பட்ட முறை தவறிய நட்பை தட்டிக் கேட்ட தகராறில் குணசுந்தரி கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றார்.

இந்தச் சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு