Published:Updated:

சென்னை: மனைவி மீது சந்தேகம்; ஆத்திரத்தில் நடந்த கொலை! - போலீஸாரிடம் கணவர் கூறிய அதிர்ச்சி காரணம்

கொலை செய்யப்பட்ட லட்சுமி
கொலை செய்யப்பட்ட லட்சுமி

மனைவியைக் கொலை செய்து விட்டு காவல் நிலையத்தில் சரண் அடைந்த கணவர், அங்கிருந்த போலீஸாரிடம் அதிர்ச்சி தகவலைத் தெரிவித்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னையை அடுத்த கோயம்பேடு அருகே உள்ள நெற்குன்றம், பெருமாள் தெருவை சேர்ந்தவர் ஆலோன்(51), இவரின் மனைவி லட்சுமி(45), இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. அதனால், கடந்த நான்கு ஆண்டுகளாக கணவன், மனைவி தனியாக வசித்து வந்தனர். தண்ணீர் கேன் போடும் வேலையை ஆலன் செய்து வந்தார். லட்சுமி வீட்டின் எதிரே பூ வியபாரம் செய்து வந்தார்.

 கொலை
கொலை

இந்த நிலையில் மனைவி லட்சுமியின் தலையில் அம்மி கல்லை போட்டு ஆலோன் கொலை செய்துள்ளார். பின்னர், ஆலோன் நேராக கோயம்பேடு போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது மனைவி பாலியல் தொழில் செய்து வருகிறார், பலமுறை கண்டித்தும் விடவில்லை. அதனால் கொலை செய்து விட்டதாக போதையில் உளறியப்படி சரணடைந்தார். அதைக்கேட்டு போலீஸார், ஆலோனை அழைத்துக் கொண்டு அவரின் வீட்டுக்கு வந்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் லட்சுமி சடலமாக கிடந்தார். இதையடுத்து லட்சுமியின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மனைவியைக் கொலை செய்த குற்றத்துக்காக ஆலோனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், லட்சுமிக்கும் ஆலோனுக்கும் திருமணமாகி 30 ஆண்டுகளாகுகின்றன. ஆலோன் மது போதைக்கு அடிமையானவர். அதனால் கடந்த 20 ஆண்டுகளாக மனைவி மீது சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக மனைவியோடு சண்டையிட்டதால், லட்சுமி தனது மகன் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை: கழுத்தில் கால்வைத்து நசுக்கிய முன்னாள் காவலர் குற்றவாளி! - நீதிமன்றம் அதிரடி
ஆலோன்
ஆலோன்

அதனால் ஆலோன், மனைவியை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். அவருக்கு பிரியாணி வாங்கி கொடுத்திருக்கிறார். இரவில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதன்பிறகு இருவரும் தூங்கச் சென்றுவிட்டனர். ஆத்திரத்திலிருந்த ஆலோன், மனைவி லட்சுமி தூங்கிக் கொண்டிருந்தபோது அம்மிக்கல்லை தலையில் போட்டு கொலை செய்திருக்கிறார்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு