Published:Updated:

சென்னை: மெரினாவில் பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.ஐ! - விசாகா கமிட்டி விசாரணை

 பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

சென்னை மெரினா கடற்கரையிலுள்ள தலைவர்கள் நினைவிடப் பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் காவலரிடம் எஸ்.ஐ ஒருவர் தவறாக நடக்க முயன்றதாகக் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் எஸ்.ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை மெரினா கடற்கரையிலுள்ள தலைவர்கள் நினைவிடத்தில் பாதுகாப்புப் பணியில் ஆயுதப்படை பெண் காவலர் ஒருவர் 12-ம் தேதி ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது பேரறிஞர் அண்ணா, பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவிடங்கள் பாதுகாப்பு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் என்பவர் பெண் காவலரை போனில் அழைத்திருக்கிறார். அப்போது பெண் காவலரைத் தனியாக வரும்படி ஆசைவார்த்தை கூறியிருக்கிறார்.

 பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
சென்னை: இசைப் பயிற்சிக்கு வந்த சிறுமிக்குப் பாலியல் தொல்லை! - புல்லாங்குழல் ஆசிரியருக்குச் சிறை

இது குறித்து பெண் காவலர் பேரறிஞர் அண்ணா, பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவிடங்கள் பாதுகாப்பு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது பெண் காவலரிடம் சப்-இன்ஸ்பெக்டர் தவறாக நடக்க முயன்றது உண்மை எனத் தெரியவந்தது.

இதையடுத்து காவல் துறையின் மாண்புக்குக் களங்களம் ஏற்படுத்தும்விதமாக நடந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜ், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள விசாகா குழுவுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு