Published:Updated:

சென்னை: கட்டுப்பாட்டை இழந்த கார்; பிளாட்பாரத்தில் படுத்திருந்த பெண்ணுக்கு நள்ளிரவில் நேர்ந்த சோகம்!

விபத்து
விபத்து ( representational image )

சென்னையில் பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிய பெண் மீது கார் மோதி பரிதாபமாக உயிரிந்தார்.

சென்னை மண்ணடி மஃபுஸ்கான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தனசெல்வி (50). கணவனை இழந்த நிலையில் ஆதரவில்லாததால் துறைமுகம் தொகுதிக்குட்பட்ட எம்.கே கார்டன் பகுதியில் உள்ள பிளாட்பாரத்தில் தங்கியிருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வேலை செய்துவந்தார். மேலும் அந்தப் பகுதியில் உள்ளவர்கள் கொடுக்கும் உணவு மூலம் வாழ்ந்து வந்தார்.

துறைமுகம் தொகுதி
துறைமுகம் தொகுதி

இந்நிலையில் நேற்று பணிகளை முடித்துவிட்டு அங்குள்ள பிளாட்பாரத்தில் தனசெல்வி படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் அந்த வழியாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து உறங்கிக் கொண்டிருந்த தனசெல்வி மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த அவர் உயிருக்குப் போராடினார்.

கல்குவாரியில் கோர விபத்து; உடல் சிதறி உயிரிழந்த 10 கூலித்தொழிலாளிகள் - ஆந்திராவில் சோகம்!

அதனால் தனசெல்வியை விபத்தை ஏற்படுத்திய ஆசிஃப் அகமது (30) என்பவரே ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியில் தனலட்சுமி உயிரிழந்தார். இதுகுறித்து பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,

விபத்தில் உயிரிழந்த தனலட்சுமி
விபத்தில் உயிரிழந்த தனலட்சுமி

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், தனலட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய ஆசிஃப் அகமதுவிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு