Published:Updated:

`தோழிகளுக்கெல்லாம் இன்னும் திருமணமாகவில்லை, எனக்கு மட்டும் ஏன்..?' - இளம்பெண் திடீர் தற்கொலை!

தற்கொலை
News
தற்கொலை ( மாதிரிப் படம் )

``என் மகள் அடிக்கடி எனக்கு சீக்கிரமாக திருமணம் செய்துவிட்டீர்கள். என்னுடைய தோழிகளுக்குத் திருமணம் ஆகவில்லை என்று கூறிவந்தார். இந்த நிலையில் தற்கொலை செய்துவிட்டார்."

சென்னை வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரின் மகள் மோனிகா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) (22). இவருக்குத் திருமணமாகி மூன்று மாதங்களான நிலையில், திடீரென தற்கொலை செய்துகொண்டார். ஆவடி காவல் நிலையத்தில் மோனிகாவின் அம்மா கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது... ``என்னுடைய கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். எங்களுக்கு இரண்டு மகள்கள்.

புகார் மனு
புகார் மனு

மூத்த மகள் மோனிகா அண்ணாநகரிலுள்ள கல்லூரியில் எம்.காம் படித்துவந்தாள். மோனிகாவுக்கும், ஆவடியைச் சேர்ந்த அகிலன் என்பவருக்கும் மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. என் மகள், மாமியார், மாமனாருடன் கூட்டுக் குடும்பமாக வசித்துவந்தாள். திருமணத்துக்கு வரதட்சணையாக மாப்பிள்ளை வீட்டார் எதுவும் கேட்கவில்லை. என் மகள் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். நாங்கள் அவளுக்குத் திருமணம் செய்துவைத்தோம். திருமணத்துக்குப் பிறகும் அவள் கல்லூரிக்குச் சென்றுவந்தாள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

என் மகள் அடிக்கடி `எனக்குச் சீக்கிரமாக திருமணம் செய்துவிட்டீர்கள். என்னுடைய தோழிகளுக்குத் திருமணம் ஆகவில்லை’ என்று கூறிவந்தாள். இந்த நிலையில், 3.1.2021-ம் தேதி முற்பகல் 11 மணியளவில் எங்களின் சம்பந்தி மீனா எனக்கு போன் செய்து என் மகள் வீட்டு ரூம் கதவைப் பூட்டி தூக்குப் போட்டுவிட்டாள் என்று கூறினார். நான் அப்போது அரக்கோணம் சென்றிருந்தேன். அதனால் அங்கிருந்து அவசர அவசரமாக என்னுடைய மகள் வீட்டுக்கு வந்தேன். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவைத் திறந்து பார்த்தோம்.

தற்கொலை!
தற்கொலை!

அப்போது என் மகள் கயிற்றால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கிக்கொண்டிருந்தாள். உடனே அவளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, மோனிகா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். என் மகளின் இறப்பில் எங்களுக்கு எந்தவிதச் சந்தேகமும் இல்லை. எனவே பிரேத பரிசோதனைக்குப் பிறகு என் மகளின் சடலத்தை நல்லடக்கம் செய்ய எங்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அவர் புகாரின் பேரில் ஆவடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இது தொடர்பாக ஆவடி போலீஸார் கூறுகையில், ``தற்கொலை செய்துகொண்ட மோனிகாவை அவரின் உறவினரான அகிலனுக்கு பெற்றோர் திருமணம் செய்துவைத்துள்ளனர். அகிலன், கிண்டியில் பணியாற்றிவருகிறார். சம்பவத்தன்று அந்தப் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போதுதான் அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். அவரின் மரணம் குறித்து விசாரித்துவருகிறோம். திருமணமாகி மூன்று மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றனர்.

இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடையவைத்திருக்கிறது.