Election bannerElection banner
Published:Updated:

சென்னை: ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்ட பெண்ணின் படம்; குற்றத்தில் ஈடுபட்ட நண்பர் சிக்கியது எப்படி!

வாட்ஸ்அப்பில் மார்பிங் படங்கள்
வாட்ஸ்அப்பில் மார்பிங் படங்கள் ( representational image )

கல்லூரியில் படிக்கும்போது அறிமுகமான மாணவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து வாட்ஸ்அப்பில் அனுப்பிய இளைஞரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

சென்னை, அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் குடியிருப்பவர் இளம்பெண் நர்மதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் இன்ஜினீயரிங் படித்திருக்கிறார். இவரின் செல்போனுக்கு தொடர்புகொண்டு பேசியவர், `உன்னுடைய ஆபாசப் படத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பியிருக்கிறேன். அதைப்போல நீயும் எனக்கு வேற ஆபாச படங்களை அனுப்பு' என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்திருக்கிறார். உடனடியாக நர்மதா, தன்னுடைய வாட்ஸ்அப்பைப் பார்த்தபோது அதில் நர்மதாவின் முகத்தை வேறொரு பெண்ணின் ஆபாச படத்துடன் இணைத்து மார்பிங் செய்யப்பட்டது தெரியவந்தது. அதைப் பார்த்து நர்மதா அதிர்ச்சியடைந்தார்.

ஆபாசப் படம்
ஆபாசப் படம்
representational image

மீண்டும் அந்த மர்ம நபர், நர்மதாவுக்கு போன் செய்து ஆபாசப் படங்களை அனுப்பும்படி கட்டாயப்படுத்தியிருக்கிறார். நர்மதா அந்த நபரை திட்டியிருக்கிறார். இதையடுத்து நர்மதா குறித்து இன்ஸ்டாகிராமில் அவதூறான தகவல்களை அந்த நபர் பதிவு செய்திருக்கிறார். இனியும் தாமதிக்கக் கூடாது என்று முடிவெடுத்த நர்மதா, திருவேற்காடு காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அதன்பேரில் போலீஸார் நர்மதாவுக்கு ஆபாசப் படம் அனுப்பப்பட்ட செல்போன் நம்பரைக் கொண்டு விசாரித்தனர்.

`பெண்களிடம் செல் நம்பர் வாங்குவார்; ஆபாச படம் அனுப்புவார்!' - வேலூர் டிராஃபிக் எஸ்.ஐ-க்குத் தண்டனை

அந்த நம்பர் யாருடையது என்பதைக் கண்டறிய அம்பத்தூர் காவல் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியை திருவேற்காடு போலீஸார் நாடினர். அம்பத்தூர் சைபர் க்ரைம் போலீஸார் அந்த செல்போன் நம்பர் குறித்து விசாரித்து அது தொடர்பான தகவல்களை திருவேற்காடு போலீஸாரிடம் தெரிவித்தனர். அந்தத் தகவலின் மூலம் ஆபாசப் படங்களை அனுப்பியவரை போலீஸார் கண்டறிந்தனர். அவரின் பெயர் சந்தோஷ் (22), வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, லத்தேரி, கரசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்ததவர் எனத் தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரித்தபோது சந்தோஷ் யார் என்பது தெரிய வந்தது.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
representational image

இது குறித்து போலீஸார் கூறுகையில்,``நர்மதா படித்த இன்ஜினீயரிங் கல்லூரியில் சந்தோஷும் படித்திருக்கிறார். அப்போது நர்மதாவுடன் சநதோஷுக்கு அறிமுகம் கிடைத்திருக்கிறது. இருவரும் நட்பாகப் பழகியிருக்கின்றனர். இருவரும் செல்போன் நம்பர்களைப் பகிர்ந்திருக்கின்றனர். இந்த நிலையில் சந்தோஷ், படிப்பைப் பாதியில் நிறுத்தியிருக்கிறார். தற்போது சோளிங்கரிலுள்ள தனியார் நிறுவனத்தில் சந்தோஷ் வேலை பார்த்துவருகிறார். நர்மதாவின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அவருக்கு அனுப்பி சநதோஷ் தொல்லை கொடுத்திருக்கிறார். அதன்பேரில் அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு