Published:Updated:

10 செல்போன்கள்; பணம், தங்கம்! -சொகுசு விடுதியில் தங்கியிருந்த கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர் கைது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர்
கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர்

கிரிக்கெட், ஆன்லைன் விளையாட்டில் பொதுமக்களிடமிருந்து பணத்தை ஏமாற்றிய கிரிக்கெட் சூதாட்ட புரோக்கரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவில் ஒரு புகாரளித்தார். அதில் ஆன்லைன் பெட்டிங்கில் பணம் கட்டி 87 லட்சம் ரூபாயை இழந்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கில் ஆன்-லைன் சூதாட்ட கும்பலைப் பிடிக்க சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்பேரில் கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர் நாகஜோதி, கூடுதல் துணை கமிஷனர் ஷாஜிதா ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் ராகவேந்திரா கே.ரவி தலைமையில் போலீஸார் சூதாட்ட கும்பலைத் தேடிவந்தனர்.

ஹரிகிருஷ்ணன்
ஹரிகிருஷ்ணன்
நீலகிரி: ஆன்லைன் சூதாட்டம்; பறிபோன‌ பணம்! - விபரீத முடிவெடுத்த கொடநாடு இளைஞர்

இந்தநிலையில் ஆன்லைனில் கேசினோ லைவ் ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் இளையதளத்தில் விளையாடுவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி பணத்தை செலுத்த வைத்து, பிறகு அதை பெட்டிங்காக மாற்றி தொடர்நது விளையாட வைப்பது தெரியவந்தது. அதன்பேரில் ஆன்லைன் சூதாட்டம் மூலம் பொதுமக்களை ஏமாற்றிய கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவர் மகாபலிபுரத்தில் உள்ள ஹோட்டலில் பதுங்கியிருந்தபோது போலீஸாரிடம் சிக்கிக் கொண்டார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில் ``கைது செய்யப்பட்ட ஹரிகிருஷ்ணனின் வங்கி கணக்கிற்குதான் விக்னேஷின் பணம் சென்றிருக்கிறது. அதன்அடிப்படையில்தான் ஹரிகிருஷ்ணனிடம் விசாரணை நடத்த வங்கி கணக்கு உள்ள அவரின் கீழ்ப்பாக்கம் வீட்டுக்குச் சென்றோம். ஆனால் அங்கு அவர் இல்லை. இதையடுத்து செல்போன் சிக்னல் மூலம் அவரின் இருப்பிடத்தை கண்டறிந்தோம். அப்போது அவர் மகாபலிபுரம் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்தது தெரிந்ததும் அங்குச் சென்று ஹரிகிருஷ்ணனைப் பிடித்தோம்.

பறிமுதல் செய்யப்பட்ட கார்
பறிமுதல் செய்யப்பட்ட கார்

இவரின் தந்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அதனால் தந்தையின் மறைவுக்குப்பிறகு ஹரிகிருஷ்ணன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். மேலும் இவர் ஐபிஎல், சர்வதேச கிரிக்கெட் போட்டி பெட்டிங்கில் புரோக்கராக ஈடுபட்டு 30 பேரிடம் பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது. இவரிடமிருந்து 193 கிராம் தங்க நகைகள், 24,68,300 ரூபாய், 6 கிலோ எடையுள்ள வெள்ளி பொருள்கள், 10 செல்போன்கள், ஒரு லேப்டாப், ஒரு ஐபேட், சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செதுள்ளோம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு