Published:Updated:

சென்னை: சிறுமிக்கு பாலியல் தொல்லை - அம்மாவுடன் கைதான மகன்!

பாலியல் தொல்லை
News
பாலியல் தொல்லை ( சித்தரிப்புப் படம் )

சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞன் அம்மாவுடன் கைது செய்யப்பட்டான்.

சென்னை வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஆதம்பாஷா (29) என்பவர் பழகியிருக்கிறார். பின்னர் அவர், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த 31.12.2021-ம் தேதி சிறுமியை அழைத்துச் சென்ற ஆதம்பாஷா, பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி ராயபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் ஆதம்பாஷாவிடம் விசாரணை நடத்தினர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விசாரணைக்குப்பிறகு ஆதம்பாஷாவை போலீஸார் கைது செய்தனர். சிறுமியிடம் விசாரித்தபோது இன்னொரு தகவல் தெரியவந்தது. இந்தச் சம்பவம் யாருக்கும் தெரியக் கூடாது என ஆதம்பாஷாவின் அம்மா மலர் (57) சிறுமியை மிரட்டியிருக்கிறார். அதனால் மலரையும் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இன்னொரு சம்பவம்:-

சென்னை கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்தில் 16 வயது சிறுமி வசித்துவருகிறார். இவர், கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டின் மொட்டை மாடியில் விளையாட செல்லும்போதும், பூ பறிக்க செல்லும் போதும் சிறுமியின் உறவினரான நாராயணன் (59) என்பவர் அவருக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வேப்பேரி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் நாராயணனிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.