Published:Updated:

`மொபைல் ஹேக் செய்வதில் அவர் கில்லாடி!' -தங்கைக்கு நேர்ந்த துயரத்தால் புகார் கொடுத்த மனைவி

தினேஷ்
தினேஷ்

தினேஷ், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். அவர் படிக்கும்போதுதான் ரேகாவை காதலித்துள்ளார். பின்னர் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர்.

சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்தவர் ரேகா (28). இவர் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், `என் கணவர் தினேஷ். எங்கள் இருவருக்கும் 2012-ல் திருமணம் நடந்தது. 6 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. என் கணவரின் நடவடிக்கைகள் பிடிக்காமல் நான் அம்மா வீட்டில் குழந்தையுடன் தங்கியுள்ளேன். இந்தச் சமயத்தில் எனக்கும் என் கணவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அதனால் என்னையும் என் குடும்பத்தினரையும் தினேஷ் மிரட்டினார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
மாதிரிப் படம்

இந்தச் சமயத்தில் என் தங்கை குளிப்பதை, என் கணவர் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டினார். எனவே, தினேஷ் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத், விசாரணை நடத்தினார். மேலும் அந்த வீடியோவைப் பறிமுதல் செய்த போலீஸார் தினேஷைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து மாதவரம் போலீஸார் கூறுகையில், ``தினேஷ், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். அவர் படிக்கும்போதுதான் ரேகாவை காதலித்துள்ளார். பின்னர் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். தினேஷ், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர் பகுதியில் வசித்துவருகிறார். வளசரவாக்கத்தில் அவரின் அப்பா நடத்தி வரும் சினிமா தியேட்டரைக் கவனித்து வந்துள்ளார். திருமணம் முடிந்த பிறகுதான் தினேஷின் சுயரூபம் ரேகாவுக்குத் தெரியவந்துள்ளது. சமீபகாலமாக தினேஷ் போதை பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார்.

செல்போன்
செல்போன்
மாதிரி படம்

இதனால் சினிமா தியேட்டருக்கும் சரிவரச் செல்வதில்லை. வளசரவாக்கத்தில் கணவர் வீட்டில் ரேகா குடியிருந்த சமயத்தில் அவரின் தங்கை, அங்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் குளியலறையில் ரேகாவின் தங்கை குளித்த சமயத்தில் செல்போன் மூலம் அதை வீடியோவாக தினேஷ், எடுத்துவைத்துள்ளார். ஆனால், அந்த வீடியோ விவரம் யாருக்கும் தெரியாது. தற்போது மனைவி ரேகா, தன்னைவிட்டு பிரிந்து சென்றதால் அவரை மிரட்ட தினேஷ், அந்த வீடியோவை ரேகாவின் செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவைப் பார்த்து ரேகாவும் அவரின் தங்கையும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

`என்னுடன் குடும்பம் நடத்த வரவில்லை என்றால் உன் தங்கையின் வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டுவிடுவேன்' என தினேஷ் மிரட்டியுள்ளார். ரேகாவின் தங்கை, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். அவருக்கு திருமணம் நடத்த ஏற்பாடு நடந்துவருகிறது. இதனால் தினேஷிடம் ரேகா குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், தினேஷ் தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. அதேநேரத்தில் தினேஷுடன் சேர்ந்து வாழ ரேகாவும் சம்மதிக்கவில்லை.

தினேஷ்
தினேஷ்

இதையடுத்து ரேகா, காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார். அதனடிப்படையில் தினேஷைக் கைது செய்து அவரின் செல்போனைப் பறிமுதல் செய்துள்ளோம். மேலும் அந்த வீடியோ வெளியில் பரவாமல் இருக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்" என்றனர்.

தினேஷ் குறித்த ரேகா, போலீஸாரிடம் முக்கியத் தகவல் ஒன்றைக் கூறியுள்ளார். `என் கணவர், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளதால் கம்ப்யூட்டர், மொபைல் ஹேக் செய்வதில் கில்லாடி' என்று கூறியுள்ளார்.

பின் செல்ல