Published:Updated:

`2 மணிநேர பழக்கம்; கைதான இளைஞர் -மெரினா கடற்கரையில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை

`பள்ளிக்குச் செல்லாமல் தனியாக மெரினாவைச் சுற்றிப்பார்க்க வந்த சமயத்தில் அங்கு கடை வைத்திருக்கும் நபர், என்னிடம் அன்பாக பேசினார்' எனப் போலீஸில் கூறியிருக்கிறார் பாதிக்கப்பட்ட மாணவி.

மெரினா
மெரினா

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து விருத்தாசலம் வழியாகச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக 22 வயது மதிக்கத்தக்க ஆணும் 15 வயது மதிக்கத்தக்க சிறுமியும் 4-வது பிளாட்பாரத்தில் காத்திருந்தனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பயணிகள், சைல்டு ஹெல்ப் லைனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு சைல்டு ஹெல்ப் லைனைச் சேர்ந்தவர்கள் அங்கு வந்தனர். அந்த இளைஞரிடமும் சிறுமியிடமும் விசாரணை நடத்தினர்.

அன்பழகன்
அன்பழகன்

அப்போது இருவரும், `சொந்த ஊருக்குச் செல்கிறோம்' என்று கூறினர். ஆனால், சிறுமியின் கண்களில் ஒருவித பயம் இருந்தது. இதையடுத்து, அந்தச் சிறுமியை தனியாக அழைத்து விசாரித்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இதையடுத்து, அந்த இளைஞரிடம் விசாரித்தபோது அவர் கூறிய தகவலும் சிறுமி கூறிய தகவலும் முன்னுக்குப்பின் முரணாகவே இருந்தன.

இதனால் இருவரையும் திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சைல்டு ஹெல்ப் லைனைச் சேர்ந்தவர்கள் ஒப்படைத்தனர். மேலும், சிறுமி கூறிய தகவல்களை அனைத்து மகளிர் போலீஸாரிடம் அவர்கள் கூறினர். இதன்பின்னர் நடந்த விசாரணையில் மெரினா கடற்கரையில் சிறுமியை அந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில் அந்த நபரின் பெயர் அன்பழகன் (22) என்றும் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. இதையடுத்து, சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த அன்பழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

`பேசுவதை தவிர்த்தாள்; பழிவாங்கவே அப்படிச் செய்தேன்!' - சூலூரில் காதலியைப் பதறவைத்த காதலன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``சைல்டு லைனைச் சேர்ந்த ரதி என்பவர் கொடுத்த புகாரின்பேரில் அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவரின் சொந்த ஊர் விருத்தாசலம், பலமலைநாதர் நகர். சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே உள்ள கடையில் அன்பழகன் வேலை பார்த்துவருகிறார். அந்தக் கடைக்கு கடந்த 29-ம் தேதி அந்தச் சிறுமி வந்துள்ளார்.

அந்தச் சிறுமியிடம் அன்பழகன் பேச்சுக் கொடுத்துள்ளார். சிறுமியும், `சென்னையில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவருகிறேன். மெரினாவைச் சுற்றிப்பார்க்க வந்துள்ளேன்' என்று கூறியுள்ளார். உடனே அன்பழகன், `உன்னுடன் யாரெல்லாம் வந்துள்ளார்கள்' என்று கேட்டுள்ளார். அதற்கு, `நான் தனியாகத்தான் வந்துள்ளேன்' எனக் கூறியுள்ளார். அதைக்கேட்ட அன்பழகன், ` இது மோசமான இடம். நீ இங்கு தனியாக வந்திருக்கக் கூடாது' என்று அக்கறையாக பேசியிருக்கிறார்.

Vikatan

அதற்குச் சிறுமி, `வீட்டில் சின்னச் சின்ன பிரச்னை. படிக்கவும் பிடிக்கவில்லை. அதனால்தான் ஸ்கூலை கட் அடித்துவிட்டு இங்கு வந்துவிட்டேன்' என்று கூறியுள்ளார். அதன்பிறகு அன்பழகனும், `எனக்கும் சென்னையில் இருக்கப் பிடிக்கவில்லை. நான் இன்று ஊருக்குச் செல்கிறேன். நீ என்னோடு வருகிறாயா?' என்று கேட்டுள்ளார். அதற்கு முதலில் மறுத்த சிறுமி அதன்பிறகு சரி என்று கூறியுள்ளார். இதையடுத்து, இருவரும் சென்னை கடற்கரையில் அமர்ந்து பேசியுள்ளனர். வெயில் அதிகமானதால் இருவரும் அங்கிருந்து புறப்பட்டு அன்பழகன் வேலை பார்க்கும் கடைக்கு வந்துள்ளனர்.

இதன்பின்னர், சிறுமியிடம் தவறான முறையில் நடந்து கொண்டார் அன்பழகன். பின்னர், அங்கிருந்து எழும்பூர் ரயில் நிலையத்துக்கு சிறுமியை அழைத்துவந்துள்ளார்.

மெரினா
மெரினா

இருவரும் சாப்பிட்டுவிட்டு ரயிலில் ஊருக்குச் செல்வதற்காகப் பிளாட்பாரத்தில் நீண்ட நேரம் காத்திருந்துள்ளனர். அப்போதுதான் இருவரும் சைல்டு ஹெல்ப் லைனைச் சேர்ந்தவர்களிடம் சிக்கியுள்ளனர். மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது.

மாணவியிடம் விசாரித்தபோது அவர் இதற்கு முன் சிலரால் ஏமாற்றப்பட்ட தகவலும் தெரியவந்துள்ளது. அதில் மூன்று பேரின் விவரங்கள் கிடைத்துள்ளன. மெரினாவில் உள்ள கடையில் வேலைபார்க்கும் அன்பழகனை காலை 10 மணியளவில் மாணவி சந்தித்துள்ளார். 2 மணி நேரம் மட்டுமே பேசியுள்ளனர். மதியம் 12 மணியளவில் மாணவிக்குக் கொடுமை நடந்துள்ளது" என்றார்.