Published:Updated:

சென்னை அதிர்ச்சி:`சின்னவன் கொலை; மூத்தவனுக்கு ஜெயில்!’ - அதிர்ச்சியில் அம்மா

கொலை
கொலை

சென்னை பெரம்பூரில் அண்ணன், தம்பிக்கு இடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. இதில் தம்பி உயிரிழந்த நிலையில் மூத்தவனை போலீஸார் தேடிவருகின்றனர்.

சென்னை எம்.கே.பி நகர் 19-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஸ்டெல்லா (57). இவரின் மகன்கள் ஜான்சன் (35), ஜான் (32). இவர்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அதனால் ஸ்டெல்லா, தன்னுடைய மகன்களுடன் வசித்து வருகின்றார். மதுவுக்கு அடிமையான அண்ணனும் தம்பியும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுவந்தனர். 28-ம் தேதி இரவு 9 மணியளவில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கூர்மையான கம்பியை எடுத்த ஜான்சன், தம்பி ஜானின் வயிற்றில் குத்தியுள்ளார்.

கொலை
கொலை
மாதிரிப் படம்

சத்தம் கேட்டு ஸ்டெல்லா மற்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஓடிவந்தனர். படுகாயமடைந்த ஜானை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்த ஜான் இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த எம்.கே.பி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்கு பதிந்து விசாரித்தார். மேலும் ஜானின் சடலத்தை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள ஜான்சனை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து ஸ்டெல்லா அளித்த புகாரில், ``என்னுடைய கணவர் அகஸ்டின் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். எனக்கு மூன்று மகள்களும் நான்கு மகன்களும் உள்ளனர். என்னுடைய மூன்று மகள்கள், பெரிய மகன் வின்சென்ட் ஆகிய 4 பேரும் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டனர். என்னுடைய கடைசி மகன் ஜேசுராஜ் 8 ஆண்டுகளுக்கு முன் உடல் நலம் சரியில்லாமல் இறந்துவிட்டான். என்னுடன் ஜான்சன், ஜான் ஆகியோர் மட்டும் தங்கியுள்ளனர். இருவருக்கும் குடிக்கும் பழக்கம் உள்ளது. இரண்டு பேருமே தினமும் குடிப்பதற்காவும் மற்ற செலவிற்கும் என்னிடம் காசு கேட்டு சண்டை போடுவார்கள்.

எப்ஐஆர்
எப்ஐஆர்

28-ம் தேதி மாலை 6 மணியளவில் இருந்தே என்னிடம் குடிப்பதற்கு காசு கேட்டு இருவரும் சண்டை போட்டார்கள். இரவு 9 மணியளவில் பெரியவன் ஜான்சன் (35), சின்னவன் ஜான் (32) ஆகிய இருவரும் சண்டை போட்டுக்கொண்டிருந்தபோது ஜான், அய்யோ அம்மா எனக் கத்தினான். நான் உடனே சென்று பார்த்தபோது ஜானின் இடது பக்க வயிற்றிலிருந்து ரத்தம் அதிகமாக வெளியேறி துடித்துக்கொண்டிருந்தான். அருகில் ஜான்சன் நின்றுகொண்டிருந்தான். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜானை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன். அங்கு தையல் போட்டுவிட்டு எக்ஸ்ரே எடுத்துவிட்டு ஜானை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்.

ஆட்டோ பிடித்து அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு வந்தேன். முதல் தளத்தின் வாசலின் வெளியே ஜான் படுத்துவிட்டான். பின்பு 29-ம் தேதி காலை 8 மணிக்கு என் மகன் ஜானை எழுப்பினேன். அவன் பேச்சு மூச்சின்றி இருந்ததால் அவன் இறந்துவிட்டதாக அழுதுகொண்டே பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னேன். ஜானுக்கு ரத்தம் அதிகம் வெளியேறியதால் அவனால் சரியாகப் பேச முடியவில்லை. நானும் பதற்றத்தில் இருந்ததால் என் மகனிடம் காயம் எப்படி ஏற்பட்டது என்று கேட்கவில்லை. எனவே, இது சம்பந்தமாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கொலை
கொலை
சென்னை: மனைவி மீது 73 வயது கணவருக்கு சந்தேகம்! -அதிர்ச்சி கொடுத்த கொலை, தற்கொலை

ஸ்டெல்லா கொடுத்த தகவலின்படி முதலில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 174 என போலீஸார் வழக்கு பதிந்தனர். பின்னர் விசாரணையில் தம்பியை அண்ணன் கொலை செய்தது தெரியவந்தது. அதனால் வழக்கை 302 என மாற்றம் செய்தனர். இந்தச் சம்பவம் எம்.கே.பி நகர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு