Published:Updated:

மாமியாருடன் பழகிய இளைஞர்; கொலை செய்த மருமகன்!

சென்னையில் மாமியாருடன் நெருங்கிப் பழகியவரை மருமகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை பாடி, வடக்கு மாட வீதியைச் சேர்ந்தவர் சூரியா. இவர் கொரட்டூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``என்னுடைய கணவர் ராமமூர்த்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எங்களுக்கு கோபி (34) என்ற மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். நான் சென்னை மாநகராட்சியில் துப்பரவுப் பணியாளராக வேலை பார்த்துவருகிறேன். என் மகன் கோபிக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவன் ஆட்டோ, வேன் வாங்கி விற்கும் தொழில் செய்துவந்தான்.

கோபி
கோபி

கடந்த இரண்டு மாதங்களாக கோபி, குமுதாவுடன் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) நெருக்கமாகப் பழகிவந்தான். இந்த விஷயம் குமுதாவின் மருமகன் நந்தகுமாருக்குத் தெரிந்தது. அதனால் குமுதாவையும் கோபியையும் நந்தகுமார் மிரட்டினார். அதைக் கேள்விப்பட்டு கோபியை நான் கண்டித்து வைத்திருந்தேன். ஆனாலும் கோபி குமுதாவின் வீட்டுக்குப் போய்க்கொண்டுதான் இருந்தான். 22.10.2021-ம் தேதி எனது மகன் கோபியிடம் என்னுடைய ஏடிஎம் கார்டைக் கேட்டேன். அதற்கு அவர் குமுதாவின் வீட்டில் வைத்திருப்பதாகச் சொல்லி அதை எடுத்துவருவதாகக் கூறி காலை 11 மணிக்குச் சென்றான். மாலை 4 மணி வரை அவன் வீட்டுக்கு வராததால் நான் குமுதாவைத் தொடர்புகொண்டு கேட்டபோது, தான் வேலையில் இருப்பதாகவும் காலையிலேயே சாவியை வாங்கிக்கொண்டு கோபி சென்றுவிட்டதாகவும் கூறினார்.

சென்னை: ரூ.10,000 மதிப்பிலான செல்போனுக்காக ரௌடி கொலை! -  சிக்கிய நண்பர்

அதனால் சந்தேகமடைந்த நான் உடனே கிளம்பி காமராஜ் நகர் 9-வது தெருவிலுள்ள குமுதாவின் வீட்டுக்குச் சென்றபோது அங்கு வந்த நந்தகுமார், என்னுடைய மகன் கோபியைச் சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டான். உடனடியாக அவனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தேன். கோபியை கொடூரமாகத் தாக்கிய நந்தகுமார்மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

நந்தகுமார்
நந்தகுமார்

புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். குமுதாவின் மருமகன் நந்தகுமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சூழலில் சிகிச்சை பலனின்றி கோபி உயிரிழந்தார். அதனால் இந்த வழக்கை கொலை வழக்காக போலீஸார் மாற்றினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு