Published:Updated:

சென்னை: `நள்ளிரவில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை!' - போக்சோவில் கைதான பக்கத்து வீட்டு இளைஞன்!

பாலியல்  தொல்லை
பாலியல் தொல்லை ( மாதிரி படம் )

சென்னையில் நள்ளிரவில் சிறுமிக்கு போன் செய்த பக்கத்து வீட்டு இளைஞன், சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததற்காக அந்த இளைஞனை போக்சோ வழக்கில் காவல்துறை கைதுசெய்துள்ளது.

தென்சென்னையில் 16 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் குடியிருந்துவருகிறார். இவர், குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது நள்ளிரவு 1:30 மணி முதல் காணவில்லை. அதனால் சிறுமியைக் குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். இந்தநிலையில் சிறுமி, வீட்டின் அருகில் ரத்தக்காயங்களுடன் மயங்கி கிடந்தார். சிறுமியை மீட்டு முதலுதவி அளித்த குடும்பத்தினர், `என்ன நடந்தது?' என்று விசாரித்தனர். அப்போது, நள்ளிரவில் வீட்டின் அருகில் வசிக்கும் நவீன்குமார் தனக்கு போன் செய்து

போன்
போன்

தன்னை அவசரமாக வீட்டைவிட்டு வெளியில் வரும்படி கூறி, தன் வாயைப் பொத்தி தூக்கிச் சென்று , தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், கைகளில் பிளேடால் கிழித்து காயப்படுத்தியதாகவும் கூறியிருக்கிறார். மேலும், இந்தச் சம்பவத்தை வெளியில் சொல்லக் கூடாது என மிரட்டிவிட்டுத் தப்பி ஓடியதாகவும் கண்ணீர்மல்கக் கூறியுள்ளார்.

சென்னை: துப்பாக்கிமுனையில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை?! -  போலீஸ் எஸ்.ஐ சிக்கியது எப்படி?

சிறுமி கூறியதைக் கேட்ட அவளின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நவீன்குமாரைத் தேடிவந்தனர். தலைமறைவான நவீன்குமாரை போலீஸார் இன்று காலை கண்டுபிடித்து விசாரித்தனர்.

கைது
கைது

அப்போது, நவீன்குமார் தான் கஞ்சா போதையில் தவறு செய்துவிட்டதாகவும், தன்னை மன்னித்துவிடுமாறும் கூறியுள்ளார். போலீஸார் நவீன்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நள்ளிரவில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு