Published:Updated:

`காதலர் தினத்தில் முடிவுக்கு வந்த 10 ஆண்டுக் காதல்!' -அதிர்ச்சி கொடுத்த மணமகளின் வாட்ஸ்அப் மெசேஜ்

திருமண அழைப்பிதழ்
திருமண அழைப்பிதழ்

கடந்த பத்து ஆண்டுகளாகக் காதலித்த ஜோடி, காதலர் தினமான 14-ம் தேதி திருமணத்துக்கு முடிவு செய்த நிலையில் சில உண்மைகளால் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த நரேந்திரன் என்ற இளைஞரும் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதி இருவருக்கும் திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவு செய்தனர். அதனால் இருவீட்டிலும் திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நேரத்தில், நரேந்திரனுக்கு வாட்ஸ்அப்பில் தகவல் ஒன்று வந்துள்ளது.

மணமகள், தான் வேலை பார்க்கும் இடத்தில் வேறொரு நபருடன் நெருங்கிப் பழகும் தகவலும் அதுதொடர்பான சேட்டிங் பட்டியலும் நரேந்திரனின் கவனத்துக்கு வந்துள்ளது. இதனால், அவர் மனமுடைந்துவிட்டார்.

புகார் கொடுக்க வந்த நரேந்திரன்
புகார் கொடுக்க வந்த நரேந்திரன்

இதுகுறித்து அந்தப் பெண்ணிடம் கேட்டிருக்கிறார். இதற்கு மணமகள் கொடுத்த பதிலால் அதிர்ச்சியடைந்தவர், திருமணத்தை நிறுத்த முடிவு செய்தார். உடனடியாக திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆதாரங்களோடு புகார் கொடுத்தார். அந்தப் புகாரில், என்னை என் காதலி ஏமாற்றிவிட்டாள் என்று குறிப்பிட்டிருந்தார். புகாரையடுத்து 14-ம் தேதி முடிவு செய்யப்பட்ட திருமணம் நின்றுபோய்விட்டது.

மணமகனின் புகாரையடுத்து மணமகளிடம் திருவொற்றியூர் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்தச் சமயத்தில் தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மணமகள் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் மணமகனிடம் தண்டையார்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தினர். காதல் ஜோடி, மாறி மாறி காவல் நிலையத்தில் புகாரளித்ததோடு ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிவருகின்றனர்.

நரேந்திரன் தரப்பில் பேசிய அவரின் வழக்கறிஞர், `` பஞ்சாப்பைச் சேர்ந்த நரேந்திரன், சென்னையில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றிவருகிறார். டிஎம்இ படித்த அவர், பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அந்தப் பெண்ணைச் சந்தித்துள்ளார். இருவரும் பத்து ஆண்டுகளாகக் காதலித்துவந்துள்ளனர்.

மணமகளுக்கு எடுக்கப்பட்ட பட்டுப்புடவை
மணமகளுக்கு எடுக்கப்பட்ட பட்டுப்புடவை

இருவீட்டிலும் பேசி திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காதலர் தினமான 14-ம் தேதி பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன் மணமகளுக்குத் தேவையான பட்டுப்புடவை, நகைகள் என அனைத்தையும் மணமகன் வீட்டினர் வாங்கி வைத்தனர். சந்தோஷமாகத்தான் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். இந்தச் சமயத்தில்தான் மணமகனின் செல்போனுக்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில், மணமகள், இன்னொருவருடன் சேட்டிங் செய்தது தொடர்பான தகவல்கள் இருந்துள்ளன. அந்த மெசேஜ் குறித்து மணமகளிடம் விசாரித்தபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

Vikatan

இதுதொடர்பாக மணமகளிடம் கேட்டுள்ளார். இதற்குச் சரியான பதில் இல்லாததால் திருவொற்றியூர் காவல்நிலையத்தில் புகாரளித்தோம். மணமகள் வீட்டிலிருந்தும் நரேந்திரன் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

புகார் மனு
புகார் மனு

போலீஸாரின் விசாரணையில், நரேந்திரன் தரப்பினர் தங்களிடமிருந்த ஆதாரங்களைக் காட்டியுள்ளனர். அதனால் இருதரப்பினரிடமும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்" என்றார்.

மணமகள் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், `` திருமணத்துக்கு முன்பே மணமகனின் சுயரூபம் தெரிந்துவிட்டது. மணமகன் வீட்டினர் தேவையில்லாத குற்றசாட்டுகளைச் சொல்கின்றனர். போலீஸார் விசாரித்து வருவதால் சில தகவல்களை வெளியில் சொல்ல முடியாது. அதேநேரத்தில் எங்கள் தரப்பு நியாயத்தை போலீஸாரிடம் கூறியுள்ளோம்" என்கின்றனர்.

பிரிந்த காதலர் மீண்டும் வந்தால், நீங்கள் முடிவெடுக்க இந்த 7 கேள்விகள் உதவும்! #RelationshipGoals
அடுத்த கட்டுரைக்கு