Election bannerElection banner
Published:Updated:

சென்னை: தம்பியைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணன்கள் சிக்கியது எப்படி?

கொலைசெய்யப்பட்ட கோவில்ராஜ்
கொலைசெய்யப்பட்ட கோவில்ராஜ்

குடிபோதையில் தகராறு செய்த தம்பியை அண்ணன்கள் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை அருகேயுள்ள மாங்காடு அடுத்த வடக்கு மலையம்பாக்கம், சோழன் நகரைச் சேர்ந்தவர் கோவில்ராஜ் (25). மதுப் பழக்கத்துக்கு அடிமையான இவர், தினமும் குடித்துவிட்டு குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம். நேற்றிரவு மது அருந்திவிட்டு போதையில் வீட்டுக்கு வந்த கோவில்ராஜ், வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் வீட்டின் வெளியில் படுத்து உறங்கியிருக்கிறார். காலையில் கோவில்ராஜ் இறந்துவிட்டதாக அவரின் குடும்பத்தினர் கதறி அழுதனர். பிறகு இந்தத் தகவல் உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அன்றைய தினமே அவசர அவசரமாக கோவில்ராஜின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

மதன்ராஜ்
மதன்ராஜ்

இந்தநிலையில், கோவில்ராஜ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் நண்பர் ஒருவர் மாங்காடு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார், கோவில்ராஜின் அம்மா சாராள் (50), அண்ணன்கள் மதன்ராஜ் (27), மைக்கேல்ராஜ் (29) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவில்ராஜ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் மனைவிக்கு பாலியல் டார்ச்சர் - அ.ம.மு.க நிர்வாகி கொடூரக் கொலை

இதையடுத்து மைக்கேல்ராஜ், மதன்ராஜ் ஆகியோரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அடக்கம் செய்யப்பட்ட கோவில்ராஜின் சடலத்தை தோண்டியெடுக்க போலீஸார் முடிவு செய்திருக்கின்றனர். கோவில்ராஜ் கொலை தொடர்பாக அவரின் அம்மாவிடமும் குடும்பத்தினரிடமும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

மைக்கேல்
மைக்கேல்

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கோவில்ராஜ், வேலைக்குச் சரியாகச் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துவந்திருக்கிறார். சம்பவத்தன்றும் மதுபோதையில் வந்த கோவில்ராஜுக்கும் அவரின் சகோதரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஆத்திரமடைந்த கோவில்ராஜின் சகோதரர்கள் அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கின்றனர். பின்னர் இயற்கையாகவே கோவில்ராஜ் இறந்துவிட்டதாகக் கூறி நாடகமாடியிருக்கின்றனர். சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தியபோது கொலை செய்ததை மைக்கேல்ராஜ், மதன்ராஜ் ஒப்புக்கொண்டனர். தம்பியைக் கொலை செய்த அண்ணன்களைக் கைதுசெய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு