Published:Updated:

சென்னை:`` அவள் என் லவ்வர்; அவளுக்குத் தொல்லை கொடுக்காதே" - இளைஞரைக் கொலை செய்த கும்பல்!

கொலை
கொலை

இந்தச் சம்பவத்தில் பெண்ணின் காதலன் உட்பட மூன்று பேரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

சென்னை தண்டையார்பேட்டை, நேதாஜி நகர், மெயின் தெருவைச் சேர்ந்தவர் தங்கம் என்கிற தங்கராஜ் (28). 10.7.2021-ம் தேதி மதியம் 2:45 மணியளவில், ஒரு பெண் உட்பட ஐந்து பேர் தங்கராஜின் வீட்டுக்கு வந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது திடீரென மறைத்துவைத்திருந்த கத்தியால் தங்கராஜை சரமாரியாகக் குத்திவிட்டு அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். தங்கராஜின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தங்கராஜைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

முதல் தகவல் அறிக்கை
முதல் தகவல் அறிக்கை

இதையடுத்து தங்கராஜின் தந்தை ராஜேந்திரன், ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் தங்கராஜின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் ஆர்.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாவிஷ்ணு கொலை உட்பட ஏழு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்தார். தங்கராஜின் தந்தை ராஜேந்திரன் அளித்த தகவலின்படி கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி என்கிற 'அரை சட்டை' பாலாஜி (24), தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பிரேம்குமார் என்கிற சின்ன அப்புனு (23), ஷாம் பிரகாஷ் என்கிற தினேஷ் (23) ஆகிய மூன்று பேரை போலீஸார் கைதுசெய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து நான்கு கத்திகளைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து ஆர்.கே.நகர் போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட தங்கராஜின் அம்மா சாந்தி, சென்னை மாநகராட்சியில் மணலி மாத்தூர் பகுதியில் துப்பரவுப் பணியாளராக வேலை செய்துவருகிறார். தங்கராஜ், பல்லாவரத்தில் பெயின்ட்டராக வேலை செய்துவந்தார். கொருக்குப்பேட்டை, திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த பெண்ணுடன் தங்கராஜுக்குப் பழக்கம் ஏற்பட்டது. இவர், தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்துவருகிறார். அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகி கணவரைப் பிரிந்து வாழ்ந்துவருகிறார்.

சென்னை: 'மாநகராட்சி ஊழியர் கொலை'- இரண்டு சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது!
கைது
கைது

தனியாக வசித்து வந்தஅந்தப் பெண்ணுக்கும், கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி என்கிற அரைச் சட்டை பாலாஜிக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். இந்தச் சமயத்தில்தான் அந்தப் பெண்ணுக்கு தங்கராஜுடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தகவல் தெரிந்ததும் பாலாஜி, `அவள் என் லவ்வர்; அவளுக்குத் தொல்லை கொடுக்காதே’ என்று தங்கராஜைக் கண்டித்திருக்கிறார். அதை தங்கராஜ் கேட்கவில்லை. அதனால் ஆத்திரமடைந்த பாலாஜி, தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து தங்கராஜை வெட்டிக் கொலை செய்திருக்கிறார். இந்த வழக்கில் மூன்று பேரைக் கைதுசெய்திருக்கிறோம். தலைமறைவாக இருக்கும் மேலும் சிலரைத் தேடிவருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு