Published:Updated:

`கர்நாடகா சிறை... மும்பை பில்டர்களுக்கு மிரட்டல்; உதவிய பெண் தாதா! - சிக்கிய பிரபல ரெளடி

கைதுசெய்யப்பட்ட யூசுப்
கைதுசெய்யப்பட்ட யூசுப்

கர்நாடகா சிறையில் இருந்துகொண்டு மும்பையிலுள்ள பில்டர்களை மிரட்டி, பணம் பறித்த ரெளடி கைதுசெய்யப்பட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மும்பையில் 2000-ம் ஆண்டு வரை மாஃபியாக்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அவர்கள் பில்டர்களுக்கும், பாலிவுட் பிரமுகர்களுக்கும் போன் செய்து மிரட்டி பணம் கேட்பார்கள். கொடுக்கவில்லையெனில் அவர்களைப் பட்டப்பகலில் சுட்டுக்கொலை செய்துவிட்டுச் சென்றுவிடுவது வழக்கம். இதனால் ரெளடிகளை போலீஸார் என்கவுன்ட்டர் செய்ய ஆரம்பித்தனர். இதனால் அதிகமான ரெளடிகள் உயிருக்கு பயந்து மும்பையை காலி செய்துவிட்டு வெளிநாடுகளில் சென்று தஞ்சமடைந்தனர். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே தற்போதும் உயிருடன் இருக்கின்றனர். அவர்களுடன் இருந்தவர்கள் இப்போதும் அடிக்கடி மும்பையில் பில்டர்களிடம் மிரட்டி, பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுவருகின்றனர்.

கைதுசெய்யப்படட்ட யூசுப்
கைதுசெய்யப்படட்ட யூசுப்

அது போன்ற ஒரு ரெளடி மும்பை பில்டர்களை மிரட்டி, பணம் பறிக்க முயன்று கைதுசெய்யப்பட்டார். மும்பை காட்கோபர் பகுதியைச் சேர்ந்த பில்டர் ஒருவருக்குக் கடந்த மாதம் சோட்டாராஜன் கூட்டாளி யூசுப் சுலைமான் கத்ரி என்ற தாதா போன் செய்து ரூ.50 லட்சம் கொடுக்கவில்லையெனில் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். இது குறித்து சம்பந்தப்பட்ட பில்டர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். ரெளடி யூசுப் போன் செய்த நம்பர் எங்கிருந்து பேசப்பட்டது என்று பார்த்தபோது, அதைக் கண்டுபிடிப்பது மிகவும் சிக்கலாக இருந்தது.

சர்வதேச சாஃப்ட்வேரைப் பயன்படுத்தி, எங்கிருந்து பேசப்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியாதபடி செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் போலீஸார் அந்த போன் எங்கிருந்து வந்தது என்பதை மிகவும் போராடிக் கண்டுபிடித்தனர். கர்நாடகாவிலுள்ள சிறையிலிருந்து யூசுப் போன் செய்திருந்தது தெரியவந்தது. யூசுப் மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டிப் பணம் பறித்தல், போலி பாஸ்போர்ட் வைத்திருத்தல் போன்றவை தொடர்பாக கர்நாடகாவின் பல்வேறு இடங்களில் ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதில் கொலை வழக்கு ஒன்றில் யூசுப் கடந்த 2001-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு கர்நாடகா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

சிறையில் இருந்துகொண்டு, சர்வதேச சாஃப்ட்வேர் உதவியுடன் எங்கிருந்து பேசுகிறோம் என்பதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் பில்டர்கள் உட்பட முக்கியப் பிரமுகர்களை போனில் மிரட்டி, பணம் வசூலிக்கும் வேலையில் ஈடுபட்டுவந்திருக்கிறார்.

கொலை - கைது
கொலை - கைது
representational image

மும்பையிலும் அவர்மீது 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யூசுப் கர்நாடகா சிறையில் இருப்பது தெரிந்தவுடன், அவரை போலீஸார் மும்பைக்கு அழைத்து வந்துள்ளனர். அவரிடம் விசாரித்தபோது பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன. யூசுப்-க்கு ஹபிபா கான் என்ற பெண் தாதா மும்பையிலுள்ள பில்டர்கள் பற்றிய விவரங்களையும், அவர்களின் போன் நம்பர்களையும் சேகரித்துக் கொடுத்துவந்தார். ஹபிபா கான் காட்கோபரிலுள்ள பில்டரிடமும் வீடு வாங்குவதுபோல் சென்று, அவரது போன் நம்பரை வாங்கி அதை கர்நாடகா சிறையிலுள்ள யூசுப்புக்குக் கொடுத்திருக்கிறார். இது தவிர பிரகாஷ் என்ற மும்பை மாநகராட்சி ஊழியர் ஒருவரும் யூசுப்புக்கு உதவி செய்துவந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. யூசுப் ஒரு காலத்தில் சோட்டாராஜன் கூட்டத்தில் முக்கியப் பிரமுகராக இருந்து, தாவூத் இப்ராகிம் அடியாட்களை தீர்த்துக்கட்டுவதில் முன்னனியில் இருந்தார். தனது 16-வது வயதில் யூசுப் ஒருவரை கொலை செய்ய முயன்று சிறுவர் சிறைக்குச் சென்றார். வெளியில் வந்த பிறகு சோட்டாராஜனுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு அவனுடன் சேர்ந்து கிரிமினல் செயல்களில் ஈடுபட்டுவந்தார். தயாரிப்பாளர் மகேஷ் கொலை முயற்சி வழக்கிலும் யூசுப்புக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

நிழலுலக ராஜாக்கள்: தாவூத் இப்ராஹிம் வாழ்க்கைக் கதை! - இறுதி அத்தியாயம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு