Published:Updated:

3 பெண் குழந்தைகளை வாய்க்காலில் வீசிக் கொலை செய்த தாய்! - கடலூர் அருகே அதிர்ச்சி

சிதம்பரம் அருகே, பெற்ற 3 பெண் குழந்தைகளை வாய்காலில் வீசிய பெண் கைதுசெய்யப்பட்டார்.

Manikandan
Manikandan

விருத்தாசலம் அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரின் மனைவி சத்தியவதி (27). இவர்களுக்கு அட்சயா(6), நந்தினி(4), ஷிவானி(2) ஆகிய 3 பெண் குழந்தைகள் இருந்தனர். பள்ளியில் படிக்கும் அட்சயாவிற்கு காலாண்டு விடுமுறை என்பதால், சத்தியவதி தனது குழந்தைகளுடன் சிதம்பரம் அருகே உள்ள கீழமணக்குடி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

Atchaya
Atchaya

இந்நிலையில், நேற்று சத்யவதி தனது தாய் வீட்டில் இருந்து கணவரின் வீடான சாத்தப்பாடி கிராமத்திற்கு வந்தவர், வீட்டுக்கு வரவில்லை.

`ஆத்துக்குள்ள விழுந்தா எப்படியிருக்கும்?'- கதறிய குழந்தைகளை ஆற்றில் வீசிய கொடூர தந்தை

இதையடுத்து, அவரின் குடும்பத்தினர் சத்தியவதி மற்றும் குழந்தைகளைத் தேடிவந்தனர். இதுதொடர்பாகப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சேத்தியாத்தோப்பு போலீஸார் சத்தியவதியைப் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், மூன்று குழந்தைகளையும் வாய்க்காலில் வீசி அவர் கொலைசெய்தது தெரியவந்தது.

Nandhini
Nandhini

இதையடுத்து, குழந்தைகளை வீசியதாக சத்தியவதி கூறிய சேத்தியாத்தோப்பு கூட்டுரோடு ரோடு அருகே உள்ள வெள்ளாறு ராஜன் வாய்க்காலில் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் குழந்தைகளின் உடல்களை போலீஸார் தேடினர். அப்போது அட்சயா, நந்தினி ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன. நீண்டநேர தேடுதலுக்குப் பிறகு ஷிவானியின் உடலும் மீட்கப்பட்டது.

Vikatan

குழந்தைகளை வாய்க்காலில் வீசிக் கொன்றது ஏன்? குடும்பப் பிரச்னை காரணமாகவா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து சேத்தியாத்தோப்பு போலீஸார் சத்தியவதியிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Manikandan
Manikandan

குழந்தைகளின் உடல்களை மடியில் போட்டுக்கொண்டு அவர்களின் தந்தை மணிகண்டன் கதறி அழுதார். இந்தச் சம்பவம் காண்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.