Published:Updated:

தலைமைக் காவலர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை! காவலர்கள் அதிர்ச்சி!

தற்கொலை செய்துகொண்ட தலைமைக் காவலர்
தற்கொலை செய்துகொண்ட தலைமைக் காவலர்

வண்டியை புல்லட் வேகத்தில் ஓட்டுவதோடு, வேலைகளையும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு முடிப்பார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுக்கோட்டை அருகேயுள்ள பூசத்துறை வெள்ளாறு ரயில்வே பாலத்தின் அருகே ரயிலில் அடிபட்டு உடல் சிதறிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரயில்வே போலீஸாரும், நமணசமுத்திரம் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், உடல் சிதறிக் கிடந்தவர் புதுக்கோட்டை அருகே மாலையீடு மலையப்பன் நகரைச் சேர்ந்த கண்ணன் (48) என்பதும், இவர் இலுப்பூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்துவந்தததும் தெரியவந்தது. ரயில்வே தண்டவாளத்துக்கு வந்த கண்ணன் எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கோவை தனியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி தற்கொலை! - வழிகாட்டியின் அழுத்தம் காரணமா?

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்துபோன கண்ணனுக்கு லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் இருக்கிறார்கள். இது பற்றி போலீஸாரிடம் கேட்டபோது, ``இரண்டு நாள் விடுப்பு எடுத்திருந்த கண்ணன், வெளியே சென்றுவிட்டு வருவதாகக் கூறிவிட்டு வீட்டைவிட்டுக் கிளம்பியிருக்கிறார். கண்ணனை `புல்லட் கண்ணன்' என்றுதான் போலீஸார் எல்லாரும் கூப்பிடுவார்கள். வண்டியை புல்லட் வேகத்தில் ஓட்டுவதோடு, வேலைகளையும் சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பார்.

கடந்த சில தினங்களாகவே கண்ணன் ஒருவித விரக்தியிலேயே இருந்திருக்கிறார். தனியாகத்தான் ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றிருக்கிறார். மன உளைச்சலில் இருந்துவந்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். வேறு ஏதாவது காரணத்தால் இறந்தாரா என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்’’ என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு