Published:Updated:

மதுரை: 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்- பிறந்த குழந்தை இறந்ததன் மூலம் வெளிவந்த குழந்தைத் திருமணம்

உசிலம்பட்டி மகளிர் காவல் நிலையம்

குழந்தைத் திருமணத்துக்கு எதிராக அரசு பல்வேறு எச்சரிக்கைகளைச் செய்தும், 14 வயது குழந்தைக்குச் சட்டவிரோதமாகத் திருமணம் செய்துவைத்து, அவருக்குப் பிறந்த குழந்தை இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை: 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்- பிறந்த குழந்தை இறந்ததன் மூலம் வெளிவந்த குழந்தைத் திருமணம்

குழந்தைத் திருமணத்துக்கு எதிராக அரசு பல்வேறு எச்சரிக்கைகளைச் செய்தும், 14 வயது குழந்தைக்குச் சட்டவிரோதமாகத் திருமணம் செய்துவைத்து, அவருக்குப் பிறந்த குழந்தை இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
உசிலம்பட்டி மகளிர் காவல் நிலையம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே போலக்காபட்டியிலுள்ள 28 வயதான உதயக்குமார் என்பவருக்கு14 வயது சிறுமியைச் சட்டவிரோதமாகத் திருமணம் செய்துவைத்த சம்பவம், அவர்களுக்குப் பிறந்த குழந்தை இறந்தது மூலம் வெளியே தெரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

பெண் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தை குடும்பத்துக்கு பாரம், செலவு என்று கருதி பெண் குழந்தைகளைக் கொல்கிற கொடூர பழக்கம் இப்பகுதியில் ஒரு காலத்தில் இருந்தது. எனினும், `தொட்டில் குழந்தை திட்டம்’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் அரசு எடுத்த தீவிர நடவடிக்கையால் அந்தக் கொடிய பழக்கம் மறைந்தாலும், அவ்வப்போது ஒருசில சம்பவங்கள் நடந்துதான் வருகின்றன.

அதுபோல் குழந்தைத் திருமணங்களும் வெளியே தெரியாமல் நடந்துவருகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்தில் இது மேலும் அதிகரித்தது.

காவல்துறை விசாரணை
காவல்துறை விசாரணை

இந்நிலையில் உசிலம்பட்டி அருகே போலக்காபட்டியைச் சேர்ந்த பெரியகருப்பனின் மகன் உதயகுமாருக்குத் தேனியை சேர்ந்த தம்பதியின் 14 வயது மகளை, கடந்த ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி திருமணம் செய்துவைத்துள்ளனர்.

சட்ட விரோதமான இந்தக் குழந்தைத் திருமணம் வெளியே தெரியாமலிருக்க போலக்காபட்டியிலுள்ள தோட்டத்து வீட்டிலேயே இருவரையும் தங்கவைத்துள்ளனர்.

இந்தக் கொடுமையிலும் கொடுமையாக அந்தக் குழந்தை கர்ப்பமாகியிருக்கிறார். தனக்கு என்ன நடக்கிறது, உடலிலும் மனதிலும் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்பது பற்றித் தெரியாத அந்தக் குழந்தை ஏழு மாத கர்ப்பமான நிலையில் நேற்று பிரசவவலி ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் உதயகுமாரின் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளனர். ஆண் குழந்தை பிறந்து சற்று நேரத்தில் இறந்ததாகக் கூறப்படுகிறது.

குழந்தை திருமணம்
குழந்தை திருமணம்

இந்தத் தகவலை எப்படியோ அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், குழந்தையின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

14 வயது குழந்தைக்குத் திருமணம் செய்துகொண்டது தொடர்பாகவும், அந்தக் குழந்தையை கர்ப்பமாக்கியது தொடர்பாகவும் உதயகுமார் மீது போக்சோ உட்பட பல பிரிவுகளில் வழக்குகளைப் பதிவுசெய்து சம்பந்தப்பட்ட இரண்டு குடும்பத்தினரிடமும் தொடர் விசாரணை நடந்துவருகிறது. இந்தக் கொடுமையான சம்பவம் மதுரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.