Published:Updated:

சென்னை: `சுட்டித்தனம், அளவுக்கு அதிகமான கோபம்' - தம்பி கொலை வழக்கில் அக்கா சிக்கியது எப்படி?

தாம்பரம் பகுதியில் சுட்டித்தனம் செய்த தம்பியைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய அக்காவை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை தாம்பரத்தை அடுத்த காட்டாங்கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (34). இவர் கூலி வேலை செய்துவருகிறார். இவரின் மனைவி சூசைமேரி (30). இந்தத் தம்பதியருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். மதுப் பழக்கத்துக்கு தியாகராஜன் அடிமையானவர். அதனால் குடும்பத்தைக் காப்பாற்ற சூசை மேரி, கூலி வேலைக்குச் சென்றுவருகிறார். அதனால் குழந்தைகளை அவரால் கவனிக்க முடியவில்லை. அதன் காரணமாக தன்னுடைய மகன் ஆபேலை (5) பீர்க்கன்காரணை, வேல்நகர், எம்.ஜி.ஆர் தெருவில் குடியிருக்கும் தன்னுடைய சகோதரி வீட்டில் விட்டிருந்தார். சூசைமேரியின் சகோதரி டார்த்தி, ஆபேலை தன்னுடைய வீட்டில் வளர்த்துவந்தார்.

மேரி
மேரி

இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன் சூசைமேரியின் சகோதரி டார்த்தி இறந்து விட்டார். அதனால் ஆபேலை டார்த்தியின் மகளான மேரி கவனித்துவந்தார். 20 வயதாகும் மேரிக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்தநிலையில் ஆபேல் திடீரென மயங்கிவிட்டதாகக் கூறி மேரி, அவனை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார். அங்கு அவனைப் பரிசோதித்த டாக்டர்கள், ஆபேல் இறந்துவிட்டதாகக் கூறினர். மேலும் குழந்தை ஆபேலின் உடலில் ஆங்காங்கே தீக்காயங்கள் இருந்தன. அதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள், பீர்க்கன்காரணை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் அங்கு வந்த போலீஸார் குழந்தை ஆபேலின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மேரியிடம், குழந்தை ஆபேல் மயக்கமடைந்தது எப்படி என்று கேட்டனர். அதற்கு அவள், முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். இதையடுத்து ஆபேலின் பெற்றோருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். அவர்களும் மேரியிடம் ஆபேல் மரணம் குறித்து விசாரித்தனர். அப்போது கீழே விழுந்ததில் மயங்கி விழுந்துவிட்டதாக மேரி கூறினார்.

மகன் கொலை வழக்கில் கைதான அம்மா! ஆண் நண்பருடன் சிக்கியது எப்படி?
சடலம்
சடலம்
representational image

ஆபேலின் உடலிலுள்ள தீக்காயங்கள் குறித்து போலீஸார் விசாரித்தபோது, ``அவன் ரொம்பவே சுட்டித்தனம் செய்வான். எதைச் சொன்னாலும் கேட்காமல் அடம்பிடிப்பான். அதனால் அவனை பயமுறுத்த சூடுவைத்தேன்’’ என்று மேரி கூறினார். தொடர்ந்து மேரியிடம் குழந்தை ஆபேல் மரணம் குறித்து விசாரித்தபோது அவர் அதிர்ச்சித் தகவல் ஒன்றைத் தெரிவித்தார். ``சம்பவத்தன்று ஆபேல், சேட்டை பண்ணியதால் அவனின் தலையைச் சுவரில் மீது மோதி அடித்தேன். அதனால் அவன் மயங்கி விழுந்திருக்கிறான். சிறிது நேரத்துக்குப் பிறகு கண்விழித்துவிடுவான் என்று கருதி வீட்டு வேலைகளைச் செய்தேன். நீண்டநேரமாகியும் ஆபேல் கண்விழிக்காதால் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன். அங்கு அவன் கீழே விழுந்ததில் மயங்கிவிட்டதாகப் பொய் சொன்னேன்’’ என்று தெரிவித்திருக்கிறார். ஆபேலின் உடலிருந்த தீக்காயங்களால் மேரி போலீஸிடம் சிக்கிக்கொண்டார். இதையடுத்து தம்பியைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மேரியை போலீஸார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மகன் கொலை வழக்கில் கைதான அம்மா! ஆண் நண்பருடன் சிக்கியது எப்படி?

மேரியின் அம்மா உயிரிழந்த பிறகு அவருக்கு அளவுக்கு அதிகமாக கோபம் வந்திருக்கிறது. அந்த ஆத்திரத்தில்தான் சுட்டித்தனம் செய்த ஆபேலை மேரி கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இந்தச் சம்பவம் தாம்பரம் பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு