Published:Updated:

சென்னை: அம்மா வீட்டில் இல்லாத நேரத்தில் மகள்களுக்கு நடந்த கொடூரம் - போக்சோவில் கைதான நபர்

பாலியல் தொல்லை

சென்னையில் கணவரை இழந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய இளைஞர், பெண்ணின் இரண்டு மகள்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்னை: அம்மா வீட்டில் இல்லாத நேரத்தில் மகள்களுக்கு நடந்த கொடூரம் - போக்சோவில் கைதான நபர்

சென்னையில் கணவரை இழந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய இளைஞர், பெண்ணின் இரண்டு மகள்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
பாலியல் தொல்லை

சென்னை, அடையாறு காவல் மாவட்டத்தில் வசித்துவரும் பெண்ணுக்கு 16 வயது, 14 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். அந்தப் பெண்ணின் கணவர் இறந்துவிட்டதால் தனியாக இரண்டு மகள்களுடன் அவர் வசித்துவந்தார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சுரேந்திரன் (35) என்பவருடன் அந்தப் பெண்ணுக்குப் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு சுரேந்திரனுடன் அவர் குடும்பம் நடத்திவந்திருக்கிறார்.

சிறுமிக்குப் பாலியல் தொல்லை
சிறுமிக்குப் பாலியல் தொல்லை

அந்தப் பெண் வேலைக்குச் செல்லும் சமயத்தில் சிறுமிகள் இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அந்த நேரத்தில் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்த சுரேந்திரன், சிறுமிகளை மிரட்டி அவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துவந்திருக்கிறார். பின்னர் இரண்டு சிறுமிகளையும் சுரேந்திரன் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதில் 13 வயது சிறுமி கரப்பமடைந்துள்ளார். பின்னர் யாருக்கும் தெரியாமல் கர்ப்பதைக் கலைத்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தத் தகவல் தெரிந்ததும் சிறுமியின் அம்மா அதிர்ச்சியடைந்தார். சுரேந்திரனுடன் அவர் வாக்குவாத்தில் ஈடுபட்டார். அதன் பிறகு மகள்களை அழைத்துக்கொண்டு அவர் கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வந்து சுரேந்திரன் மீது புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து சுரேந்திரனிடம் விசாரித்தனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமிகள் அளித்த தகவலின்பேரில் சுரேந்திரனை போலீஸார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism