Published:Updated:

நாமக்கல்: குழந்தைத் தொழிலாளர்களைப் பணியமர்த்திய 7 நிறுவனங்கள்! - அதிரடிகாட்டிய அதிகாரிகள்

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்திய ஏழு நிறுவன உரிமையாளர்கள்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்: குழந்தைத் தொழிலாளர்களைப் பணியமர்த்திய 7 நிறுவனங்கள்! - அதிரடிகாட்டிய அதிகாரிகள்

நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்திய ஏழு நிறுவன உரிமையாளர்கள்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Published:Updated:
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாகத் தொடர் புகார் வந்தது. அதோடு, கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதற்குப் பிறகு பள்ளிக்கு வராத மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், முதன்மைக் கல்வி அலுவலரின் அறிக்கையின்படி, பள்ளியில் இடை நின்றவர்கள் அதிக அளவில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டது. இதனால், இடைநின்ற மாணவர்கள் என்ன ஆனார்கள் என்று அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா பி சிங் உத்தரவின்பேரில் நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் தலைமையிலான தொழிலாளர்துறை அலுவலர்கள் அடங்கிய குழு, நாமக்கல் மாவட்டத்திலுள்ள இடைநின்ற குழந்தைகளின் வீட்டு முகவரிக்குச் சென்று அவர்கள் பள்ளிக்குச் செல்கின்றனரா அல்லது வேலைக்குச் செல்கின்றனரா என்று நேரடி ஆய்வில் இறங்கினர். அவர்களின் விசாரணையில், பள்ளிக்குச் செல்லாமல் இருப்பவர்களை உடனடியாகப் பள்ளிக்கு அனுப்ப பெற்றோருக்கு உரிய அறிவுரைகள் வழங்கிவருகின்றனர்.

நாமக்கல்
நாமக்கல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதோடு, நாமக்கல் மாவட்டத்தில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினர் வேலைக்குச் செல்கின்றனரா என்பது குறித்தும் இந்தக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டுவந்தனர். அந்த வகையில், கடந்த இரண்டு மாதங்களில் 45 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டதில் ஒரு நிறுவனத்தில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைத் தொழிலாளி பணிபுரிந்துவந்ததையும், ஆறு நிறுவனங்களில் 18 வயதுக்கு உட்பட்ட ஆறு வளரிளம் பருவத் தொழிலாளர்கள் பணிபுரிந்துவந்ததையும் கண்டறிந்தனர். அந்த வகையில், மொத்தம் ஏழு சிறுவர்கள் மீட்கப்பட்டு, குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். அதோடு, மேற்கண்ட ஏழு நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீதும் குழந்தைத் தொழிலாளர் சட்ட விதிகளின்படி வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. "குழந்தைத் தொழிலாளர்களையோ, வளரிளம் பருவத்தினரையோ பணிக்கு அமர்த்தினால் குறைந்தபட்ச அபராதமாக ரூ. 20,000 விதிக்கப்படும்" என தொழிலாளர் உதவி ஆணையர் திருநந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism