Published:Updated:

பிளாஸ்டிக் கவரில் சடலம்; சினிமா தயாரிப்பாளர் கடைசியாக சென்ற இடம் - கொலையால் வெளிவந்த சீக்ரெட்

சினிமா தயாரிப்பாளர் பாஸ்கரன்

சினிமா தயாரிப்பாளர் பாஸ்கரன் கடந்த 2.9.2022-ம் தேதி இரவு குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு விருகம்பாக்கத்தில் நண்பர் வீட்டிலிருப்பதாகக் கூறியுள்ளார். ஆனால், அன்றைய தினம் இரவு நீண்ட நேரமாகியும் பாஸ்கரன் வீட்டுக்குச் செல்லவில்லை.

பிளாஸ்டிக் கவரில் சடலம்; சினிமா தயாரிப்பாளர் கடைசியாக சென்ற இடம் - கொலையால் வெளிவந்த சீக்ரெட்

சினிமா தயாரிப்பாளர் பாஸ்கரன் கடந்த 2.9.2022-ம் தேதி இரவு குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு விருகம்பாக்கத்தில் நண்பர் வீட்டிலிருப்பதாகக் கூறியுள்ளார். ஆனால், அன்றைய தினம் இரவு நீண்ட நேரமாகியும் பாஸ்கரன் வீட்டுக்குச் செல்லவில்லை.

Published:Updated:
சினிமா தயாரிப்பாளர் பாஸ்கரன்

சென்னை விருகம்பாக்கம், சின்மயாநகர் பாலம் அருகே நெற்குன்றம் சாலையில் உள்ள பிசியோதெரபி கிளினிக் எதிரில் உள்ள தெருவில் பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்ட நிலையில் ஆண் சடலம் கடந்த 3.9.2022-ம் தேதி கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த விருகம்பாக்கம் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். உதவி கமிஷனர் கௌதம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தாம்சன் சேவியர், சுமதி ஆகியோர் கொண்ட தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சடலமாக கிடந்தவர் பாஸ்கரன், (68), ஆதம்பாக்கம், ராமகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது.

சடலம்
சடலம்

பாஸ்கரனைக் கொலை செய்தது யார் என்று போலீஸார் சி.சி.டி.வி. செல்போன் சிக்னல் மூலம் தேடிவந்தனர். பாஸ்கரனின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது விருகம்பாக்கம், அரங்கநாதன் நகர், ஓட்டை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த கணேசனுடன் (54) அவர் பேசியது தெரியவந்தது. அதனால் கணேசன் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து கணேசன் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தபோது பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட சடலத்தை எடுத்துக் கொண்டு கணேசன் வெளியில் வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதுகுறித்து கணேசனிடம் விசாரித்தபோது கொலைக்கான காரணம் தெரியவந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட பாஸ்கரனுக்கும் கணேசனுக்கும் இடையே நீண்ட காலமாக பழக்கம் இருந்து வந்துள்ளது. பாஸ்கரன், ரியல் எஸ்டேட், கட்டுமானம் என சில பிசினஸ்களை செய்து வந்ததோடு சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் ராம்கியை வைத்து ஒரு படமும், ஒயிட் என இன்னொரு படத்தையும் தயாரித்துள்ளார். பின்னர் சினிமா தயாரிப்பில் ஈடுபடாமல் முழுநேர பிசினஸ்மேனாக செயல்பட்டுள்ளார். அடிக்கடி கணேசனைச் சந்திக்க பாஸ்கரன் அவரின் வீட்டுக்கு வந்துச் செல்வதுண்டு. சம்பவத்தன்று (2.9.2022) மாலை பாஸ்கரன், கணேசன் வீட்டுக்கு மது அருந்த சென்றுள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாஸ்கரன், கணேசனை அசிங்கமாக திட்டியதோடு அடித்துள்ளார்.

கணேசன்
கணேசன்

அதனால் கோபமடைந்த கணேசன், அருகில் கிடந்த கட்டையை எடுத்து பாஸ்கரனின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். அதில் பாஸ்கரன் நிலைதடுமாறி கீழே விழுந்து மயங்கி விழுந்துள்ளார். அப்போது ரத்தம் அதிகளவில் வெளியேறி பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து பாஸ்கரனின் சடலத்தை மறைக்க பிளாஸ்டிக் கவரை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்த கணேசன், பாஸ்கரனின் கை.,, கால்களை நைலான் கயிற்றால் கட்டியுள்ளார். பிளாஸ்டிக் கவரில் பாஸ்கரனின் சடலத்தை சுற்றி வீட்டிலிருந்து வெளியில் எடுத்து வந்த கணேசன், பைக்கில் சடலத்தை வைத்து கொண்டு வந்துள்ளார். மெயின் ரோட்டில் போலீஸார் நிற்பதைப் பார்த்த கணேசன், சடலத்தை தெருவில் வீசி விட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். சி.சி.டி.வி மூலம் பாஸ்கரனின் கொலையைக் கண்டறிந்து கணேசனைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டோம். கொலைக்கு பயன்படுத்திய கட்டை, பைக்கை பறிமுதல் செய்துள்ளோம் "என்றனர்.

இந்தக் கொலை வழக்கை விசாரித்த தனிப்படை போலீஸாரிடம் பேசினோம். ``சினிமா தயாரிப்பாளர் பாஸ்கரன் கடந்த 2.9.2022-ம் தேதி இரவு குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு விருகம்பாக்கத்தில் நண்பர் வீட்டிலிருப்பதாகக் கூறியுள்ளார். ஆனால், அன்றைய தினம் இரவு நீண்ட நேரமாகியும் பாஸ்கரன் வீட்டுக்குச் செல்லவில்லை. அதனால் அவரின் குடும்பத்தினர் பாஸ்கரனிடம் பேச செல்போனில் அழைத்தபோது சுவிட்ச் ஆப் என பதில் வந்துள்ளது. இதையடுத்து பாஸ்கரனின் காரில் உள்ள ஜிபிஎஸ் மூலம் அவரின் குடும்பத்தினர் தேடினர். அப்போது கார், விருகம்பாக்கத்தில் நின்றுக் கொண்டிருப்பதை குடும்பத்தினர் கண்டறிந்தனர். ஆனால் காருக்குள் பாஸ்கரன் இல்லை. அதனால் பாஸ்கரனைக் காணவில்லை என ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து தேடியுள்ளனர்.

கைது
கைது

இந்தச் சமயத்தில்தான் பாஸ்கரன் கொலை செய்யப்பட்டு பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு சடலமாக கிடக்கும் தகவல் அவரின் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தினோம். பாஸ்கரனின் ஏ.டி.எம். கார்டிலிருந்து பணமும் எடுக்கப்பட்டிருந்தது. அதுகுறித்து விசாரித்தபோது பாஸ்கரன்தான் பணத்தை எடுத்திருப்பது தெரியவந்தது. அதனால் பணத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திலும் விசாரணை நடத்தினோம். பாஸ்கரனுக்கு நன்கு அறிமுகமான கணேசன்தான் அவரைக் கொலை செய்தது உறுதியானதும் அவரிடம் விசாரித்தோம். அப்போது கணேசன், ரகசியமாக வீட்டுக்கே பெண்களை வரவழைத்து பாலியல் தொழில் செய்து வந்த தகவல் கிடைத்தது. சம்பவத்தன்று கணேசன் வீட்டுக்குச் சென்ற பாஸ்கரன், சந்தோஷமாக இருக்க சில ஆயிரம் ரூபாயைக் கொடுத்துள்ளார். ஆனால், பாஸ்கரனுக்கு கணேசன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதனால் ஏற்பட்ட தகராறில்தான் பாஸ்கரன் கொலை செய்யப்பட்டுள்ளார். பாஸ்கரனின் சீக்ரெட், இந்தக் கொலையால் வெளியில் தெரிந்து விட்டது" என்றனர்.