Published:Updated:

திருப்பூர்: கிராமத்தில் வீடு எடுத்து கள்ளநோட்டு அச்சடிப்பு - வனத்துறை அதிகாரியாக நடித்தவர் கைது!

கள்ளநோட்டு அச்சடிப்பு

``தன்னை வனத்துறை அதிகாரி என்றுகூறி கொழுமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கிய பிரபு, அங்கிருந்து 500 ரூபாய் கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டிருக்கிறார்." - போலீஸார்.

திருப்பூர்: கிராமத்தில் வீடு எடுத்து கள்ளநோட்டு அச்சடிப்பு - வனத்துறை அதிகாரியாக நடித்தவர் கைது!

``தன்னை வனத்துறை அதிகாரி என்றுகூறி கொழுமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கிய பிரபு, அங்கிருந்து 500 ரூபாய் கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டிருக்கிறார்." - போலீஸார்.

Published:Updated:
கள்ளநோட்டு அச்சடிப்பு

கேரள மாநிலத்தைச் சேர்ந்த கனிகராஜ் (46) என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன், மூணாறு பகுதியிலுள்ள தனியார் வங்கி பணம் செலுத்தும் இயந்திரம் மூலம் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை தனது வங்கிக் கணக்கில் செலுத்த முயன்றிருக்கிறார். கள்ளநோட்டு என்பதால், அந்தப் பணத்தை இயந்திரம் எடுத்துக்கொள்ளாமல் நிராகரித்திருக்கிறது. மேலும், கள்ள ரூபாய் நோட்டுகளை இயந்திரத்தில் கனிராஜ் செலுத்த முயன்றது தொடர்பான தகவலை அந்த இயந்திரம் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவித்திருக்கிறது.

கள்ளநோட்டு
கள்ளநோட்டு
மாதிரிப் படம்

இது தொடர்பாக வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், வங்கிக் கணக்கு எண்ணை வைத்து கள்ள ரூபாய் நோட்டுகளை இயந்திரத்தில் செலுத்த முயன்ற கனிராஜை கேரள போலீஸார் கைதுசெய்தனர். அவரிடமிருந்து 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 76 பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இதுதொடர்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த ராம்குமார், அழகர், திருமயத்தைச் சேர்ந்த பழனிகுமார், குமரலிங்கத்தைச் சேர்ந்த ஹக்கீம் ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர்.

பிரபு
பிரபு

இந்த வழக்கில் தொடர்புடைய தேனி மாவட்டம் கரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு, திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த கொழுமம் பகுதியில் வசித்துவருவதாக கேரள போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கொழுமம் வந்த மறையூர் போலீஸார், அங்கு பிரபுவைக் கைதுசெய்தனர். அவரிடமிருந்து 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 356, ஒரு பிரிண்டரை போலீஸார் பறிமுதல்செய்தனர். அவரிடம் விசாரணை செய்ததில், வனத்துறை அதிகாரி என்றுகூறி வீட்டை வாடகைக்கு எடுத்து கள்ளநோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.