Published:Updated:

சேலம்: பெண்கள் கிளைச் சிறையில் வார்டன்கள் மோதல்; பாரா புத்தககம் கிழிப்பு! - மெமோ பின்னணி என்ன?!

சேலம் பெண்கள் கிளைச் சிறை

சிறைத்துறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் அவர்களிடம் பேசியபோது, “நான் தான் விசாரணை செய்து வருகிறேன். அதுப்போன்று எதுவும் இல்லை. சிறைத்துறை வட்டாரங்களில் நடப்பது என்னுடைய பார்வைக்கு வராமல் இருக்காது” என்றார்

சேலம்: பெண்கள் கிளைச் சிறையில் வார்டன்கள் மோதல்; பாரா புத்தககம் கிழிப்பு! - மெமோ பின்னணி என்ன?!

சிறைத்துறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் அவர்களிடம் பேசியபோது, “நான் தான் விசாரணை செய்து வருகிறேன். அதுப்போன்று எதுவும் இல்லை. சிறைத்துறை வட்டாரங்களில் நடப்பது என்னுடைய பார்வைக்கு வராமல் இருக்காது” என்றார்

Published:Updated:
சேலம் பெண்கள் கிளைச் சிறை

சேலம், ஏற்காடு செல்லும் வழியில் அமைந்துள்ளது பெண்களுக்கான கிளைச் சிறை. சமீபத்தில் இங்கு பணியாற்றும் இரண்டு பெண் வார்டன்கள் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிறைத்துறை வட்டாரங்களில் விசாரித்த போது, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட இரண்டு பெண் வார்டன்களும் லெஸ்பியன் உறவில் இருந்தவர்கள் என்றும் அதில், ஒரு மூத்த வார்டன் புதிதாக பணிக்கு வந்த ஒரு பெண் வார்டனுடன் பழக ஆரம்பித்திருக்கிறார் என்றும், இதனால் ஏற்கனவே பழக்கத்தில் இருந்த மற்றொரு வார்டுனுக்கும் மூத்த வார்டனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த மோதலில் ஒரு வார்டன் பாரா புத்தகத்தை கிழித்து சண்டை போட்டு உள்ளார்.

சேலம் பெண்கள் கிளைச் சிறை
சேலம் பெண்கள் கிளைச் சிறை

இந்த விவகாரத்தை சிறைத்துறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் விசாரணை மேற்கொண்டு வந்தார் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் பெண்கள் சிறை வளாகத்தில், `சம்பந்தப்பட்ட இரண்டு வார்டன்களால், மற்றவர்களுக்கு தான் கெட்டபேரு’ என்று பணியிலிருக்கும் ஒரு பெண் ஏட்டு கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த விவகாரத்தில் மீண்டும் மோதல் ஏற்பட்டது என செய்திதாள்களில் செய்திகள் வெளியானது. இதனால் சிறை துறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் இரண்டு பேருக்கும் மெமோ கொடுத்துள்ளதாகவும் சொல்லப்பட்டது.

இதுகுறித்து சிறைத்துறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் அவர்களிடன் பேசியபோது, “நான் தான் விசாரணை செய்து வருகிறேன். அதுப்போன்று எதுவும் இல்லை. சிறைத்துறை வட்டாரங்களில் நடப்பது என்னுடைய பார்வைக்கு வராமல் இருக்காது” என்றார்.

சேலம்: பெண்கள் கிளைச் சிறையில் வார்டன்கள் மோதல்; பாரா புத்தககம் கிழிப்பு! - மெமோ பின்னணி என்ன?!

இது தொடர்பாக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தர் அவர்களிடம் பேசியபோது, ``சம்பந்தப்பட்ட புகார் குறித்து இன்று நேரில் சென்று விசாரணை நடத்தப்பட்டது. அதில் செய்தித்தாள்களில் வரும் தகவல்களுக்கு முரணாக தகவல்கள் தான் விசாரணையில் கிடைத்துள்ளது. மேலும் இதுபோன்ற தவறான தகவல்களை வெளியில் பரப்பு வரும் அதிகாரி யார் என்று தெரியவந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம். சம்பந்தப்பட்ட வார்டன்கள் இரண்டு பேருக்கு மெமோ வழங்கியதற்கு காரணம், அவர்கள் பாரா புத்தகத்தை கிழித்ததனால் ஒழிய தவிர வேறு எந்த காரணத்திற்கும் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. சம்பந்தப்பட்ட இரண்டு வார்டன்களுக்கு இடையே மன சங்கடம் ஏற்பட்டதால், வந்த பிரச்னையை ஒழிய வேறு எந்த காரணமும் இல்லை" என்றார்.