Published:Updated:

`அபராதம் எல்லாம் கட்ட முடியாது!' -பெண் ஆய்வாளரை அவதூறாகப் பேசிய தி.மு.க ஒ.செ?

தி.மு.க ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி
தி.மு.க ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி

மதுபோதையில் காரை ஓட்டியதாகக் கூறி அடைக்கலமணிக்கு அபராதம் விதித்துள்ளார், காவல் ஆய்வாளர் பிரான்சிஸ் மேரி.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தி.மு.க ஒன்றியச் செயலாளராக இருப்பவர் அடைக்கலமணி. இவரது மனைவி சுதா, பொன்னமராவதி ஒன்றிய சேர்மனாக இருக்கிறார். அடைக்கலமணி, வெளியூர் சென்றுவிட்டு பொன்னமராவதிக்கு காரில் வந்துள்ளார்.

அப்போது, வளையப்பட்டி சோதனைச் சாவடியில் நின்றிருந்த போலீஸார், அந்தவழியாக வந்த வாகனங்கள் அனைத்தையும் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அடைக்கலமணியின் காரையும் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அடைக்கலமணி மதுபோதையில் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

‘சார், சைடிஷ் வாங்க வந்தேன்!’-ஊரடங்கில் சுற்றித்திரிந்த வாலிபருக்கு ஷாக் கொடுத்த புதுக்கோட்டை போலீஸ்

இதையடுத்து, சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து பெண் காவல் ஆய்வாளர் பிரான்சிஸ் மேரி, மதுபோதையில் காரை ஓட்டியதாகக் கூறி அடைக்கலமணிக்கு அபராதம் விதித்துள்ளார். அபராதம் எல்லாம் கட்ட முடியாது என்று கூறிய அடைக்கலமணி, காவல் ஆய்வாளர் பிரான்சிஸ் மேரியைத் தகாத வார்த்தைகளில் பேசியதாகக் கூறப்படுகிறது.

காவல் ஆய்வாளர் பிரான்சிஸ்  மேரி
காவல் ஆய்வாளர் பிரான்சிஸ் மேரி

இதையடுத்து, மதுபோதையில் காரை ஓட்டியது. அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் அடைக்கலமணி மீது பொன்னமராவதி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

இந்நிலையில், திருமயம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதி, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், `பொன்னமராவதி காவல் நிலையத்தில் வாகன ஓட்டிகளிடம் அதிகபட்ச அபராதத் தொகை வசூலிக்கப்படுகிறது. நியாயமான அபராதத் தொகையை வசூல் செய்யுங்கள் என்றுதான் அடைக்கலமணி கூறியுள்ளார். ஆனால், தி.மு.க மீதும் ஒன்றியச் செயலாளர் மீதும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர்மீது உண்மைக்குப் புறம்பான காரணங்களைக் காண்பித்து ஒரு பொய் வழக்கை பொன்னமராவதி காவல்துறையினர் பதிவுசெய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

`குளத்துக்குள் 2 மணிநேர நீச்சல்!' - நெல்லை போலீஸைப் பாடாய்ப்படுத்திய `பேட்டை' பாஸ்கர்

வழக்கை காவல்துறையினர் வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றம் மூலமாக உண்மை வெளிச்சத்துக்கு வரும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, மதுபோதையில் காரை ஓட்டியது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் அடைக்கலமணி மீது பொன்னமராவதி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு