Published:Updated:

`சைக்கிள் ஸ்டாண்டு ஏலம்; மோதிக்கொண்ட தி.மு.க பிரமுகர்கள்!’ - காட்பாடி பஞ்சாயத்து

மனைவியுடன் ரங்கராஜன்
மனைவியுடன் ரங்கராஜன்

சைக்கிள் ஸ்டாண்டை ஏலம் எடுப்பது தொடர்பாக, தி.மு.க பிரமுகர்கள் இருவர் மோதிக்கொண்ட சம்பவம், காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரை அடுத்த காட்பாடி காந்தி நகரைச் சேர்ந்தவர் ரங்கராஜன். ரியல் எஸ்டேட் அதிபரான இவர், வேலூர் மாநகர தி.மு.க-வில் வர்த்தக அணி துணை அமைப்பாளராகவும் பொறுப்பு வகிக்கிறார். இவரது மனைவி சரஸ்வதி.

துரைமுருகனுடன் சுனில்குமார்
துரைமுருகனுடன் சுனில்குமார்

இவர்கள் இரண்டு பேரும், வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிப்பதற்காக இன்று வந்தனர். சரஸ்வதி கொடுத்த மனுவில், ``காந்தி நகரில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டை என் கணவர் லீஸுக்கு எடுத்து நடத்திவருகிறார்.

கடந்த 14-ம் தேதி, சைக்கிள் ஸ்டாண்டு ஏலம் நடந்தது. அதில், கலந்துகொண்ட என் கணவரிடம் தி.மு.க-வைச் சேர்ந்த மாநகராட்சி முதல் மண்டலத்தின் முன்னாள் தலைவரான சுனில்குமார் தகராறுசெய்தார்.

சுனில்குமார்
சுனில்குமார்

அதைத் தொடர்ந்து,17-ம் தேதி காலை, 15-க்கும் மேற்பட்ட நபர்களுடன் சுனில்குமார் என் வீட்டுக்கு வந்தார். `ஏலம் கேட்க வரக்கூடாது’ என்று மிரட்டி கணவரைத் தாக்கினார். சுனில்குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகப் புகார் அளிக்க வந்துள்ளோம்’’ என்றனர்.

இதுதொடர்பாக, சுனில்குமாரை போனில் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். ``என்மீது எந்தத் தவறும் இல்லை. அவர்கள் தான் என்னிடம் தகராறு செய்து மிரட்டுகிறார்கள். போனில் என்னை ஆபாசமாகத் திட்டியதால், ரங்கராஜன் வீட்டுக்கு நேரில் சென்றேன். கேட்டுக்கு வெளியில்தான் நின்றிருந்தேன்.

மனைவியுடன் ரங்கராஜன்
மனைவியுடன் ரங்கராஜன்

அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் சுற்றிநின்று வேடிக்கை பார்த்தனர். அவர்கள் என்னுடன் வந்தவர்கள் என்று போட்டோ எடுத்து கதைகட்டுகிறார்கள். என் மீதான குற்றச்சாட்டு முழுக்க முழுக்க உண்மையில்லை. ரங்கராஜன் மீது நானும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு