Published:Updated:

சேலம் சிறை: காவலர் கொலை வழக்கில் கைதான கைதிகளிடையே திடீர் மோதல் - அதிகாரிகள் தீவிர விசாரணை

சிறையில் மோதல்

தனக்குத் தூக்கம் கெடுவதாகக் கூறி, சிறையின் கதவுக் கம்பியை கைதி ஒருவர் தட்டியிருக்கிறார். அங்கு வந்த வார்டனிடம் சத்தத்தைக் குறைவாக வையுங்கள் எனக் கூறியிருக்கிறார்.

சேலம் சிறை: காவலர் கொலை வழக்கில் கைதான கைதிகளிடையே திடீர் மோதல் - அதிகாரிகள் தீவிர விசாரணை

தனக்குத் தூக்கம் கெடுவதாகக் கூறி, சிறையின் கதவுக் கம்பியை கைதி ஒருவர் தட்டியிருக்கிறார். அங்கு வந்த வார்டனிடம் சத்தத்தைக் குறைவாக வையுங்கள் எனக் கூறியிருக்கிறார்.

Published:Updated:
சிறையில் மோதல்

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச்சாவடியில், கடந்த 2020-ம் ஆண்டு சிறப்பு எஸ்.ஐ வில்சன் என்பவர் பணியில் இருந்தபோது, அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்த வழக்கில் தொடர்புடைய இரண்டு பேர் சேலம் மத்திய சிறையில் கைதிகளாக இருக்கின்றனர். பின்னர் கைதுசெய்யப்பட்ட அப்துல் சமீம், தவ்பிக் ஆகிய இருவரும் தீவிரவாத கும்பலுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கை என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். கைதான இவர்கள் மீது உபா சட்டமும் பாய்ந்தது. இவர்கள் இருவரும் சேலம் மத்திய சிறையில் உயர் பாதுகாப்புத் தொகுதியில் தனித்தனியாக எதிரெதிர் அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, வாக்கி-டாக்கி சத்தம் அதிகமாகக் கேட்டிருக்கிறது. தனக்குத் தூக்கம் கெடுவதாகக் கூறி சிறையின் கதவுக் கம்பியை அவர்களில் ஒருவர் தட்டியிருக்கிறார். அங்கு வந்த வார்டனிடம் சத்தத்தைக் குறைவாக வையுங்கள் எனக் கூறியிருக்கிறார்.

சேலம் மத்திய சிறை
சேலம் மத்திய சிறை

எதிர் அறையில் இருந்த மற்றொருவர், `கம்பியைத் தட்டுவதால் எனக்கு தூக்கம் கெடுகிறது’ எனக் கூறியிருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. நேற்று காலையில் அறை திறக்கப்பட்டவுடன் இருவரும் வெளியே வந்துள்ளனர். அப்போது மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் முடியைப் பிடித்துக்கொண்டு சண்டையிட்டுக்கொண்டனர். அங்கு ஓடி வந்த வார்டன்கள் இருவரையும் விலக்கி, சமாதானம் செய்தனர். இந்த விவகாரம் சிறைக் கண்காணிப்பாளர் தமிழ்செல்வனின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவர் இருவரையும் அழைத்து, கடும் எச்சரிக்கை செய்தார். மேலும், சிறைக்குள் நடத்தை விதிகளை மீறியதாக அவர்கள் உறவினர்களைச் சந்திக்க மூன்று மாதங்கள் தடைவிதித்தும் உத்தரவிடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகளும் விசாரணை நடத்திவருகின்றனர். சிறையில் கைதிகள் இருவருக்குள் நடந்த மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.