Published:Updated:

ரம்ஜான் தொழுகை நடத்துவதில் தகராறு; காவல் நிலைய வாசலில் வெடித்த மோதல் - 41 பேர்மீது வழக்கு!

சமாதானம் செய்யும் போலீஸ்

பள்ளிவாசலில் தொழுகை நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ரம்ஜான் தொழுகை நடத்துவதில் தகராறு; காவல் நிலைய வாசலில் வெடித்த மோதல் - 41 பேர்மீது வழக்கு!

பள்ளிவாசலில் தொழுகை நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Published:Updated:
சமாதானம் செய்யும் போலீஸ்

கன்னியாகுமரி பகுதியில் பள்ளிவாசலை நிர்வகிப்பது தொடர்பாக இரண்டு தரப்பினரிடையே அடிக்கடி மோதல் நடைபெற்றுவருகிறது. இது சம்பந்தமாக கன்னியாகுமரி காவல் நிலையத்தில் சில வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், பள்ளிவாசலைத் தற்போது நிர்வகித்துவரும் தரப்பினர் நேற்று ரம்ஜான் பண்டிகை தொழுகை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தியுள்ளனர். நேற்று அரபு நாடுகளில் ரம்ஜான் தொழுகை நடந்ததன் அடிப்படையில் இந்தப் பள்ளிவாசலிலும் நேற்று தொழுகை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது, மற்றொரு தரப்பினர் இன்று ரம்ஜான் பண்டிகை விளையாட்டுப் போட்டிகள் நடத்தவிருப்பதாக நேற்று அறிவித்துள்ளனர். இதனால் பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்காக இரண்டு தரப்பையும் கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு போலீஸார் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்.

சமாதானம் செய்யும் போலீஸ்
சமாதானம் செய்யும் போலீஸ்

இதையடுத்து இரு தரப்பிலிருந்தும் சுமார் 50 பேர் நேற்று இரவு கன்னியாகுமரி காவல் நிலையத்துக்குச் சென்றனர். அங்கு பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்தில், வெளியில் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால், அனைவரும் டி.எஸ்.பி அலுவலகம் சென்று பேச்சுவார்த்தை நடத்தும்படி போலீஸார் கூறியுள்ளனர். ஆனால், வெளியே வந்த இரு தரப்பினரும் காவல் நிலைய வாசலிலேயே மோதலில் ஈடுபட்டனர். இரண்டு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மோதல்
மோதல்

அதையடுத்து, உடனடியாக போலீஸார் தலையிட்டு இரு தரப்பையும் சமாதனப்படுத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு தரப்பினர் கன்னியாகுமரி - நாகர்கோவில் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். தகவலறிந்து அங்கு சென்ற கன்னியாகுமரி டி.எஸ்.பி ராஜா, மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது. காவல்நிலையம் முன்பாக மோதலில் ஈடுபட்டதாக 41 பேர் மீது கன்னியாகுமரி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism