Published:Updated:

கோவை தனியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி தற்கொலை! - வழிகாட்டியின் அழுத்தம் காரணமா?

தற்கொலை (Representational Image)
தற்கொலை (Representational Image)

கேரளாவைச் சேர்ந்த கோவை தனியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி தற்கொலைச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்குட்டி. இந்திய ராணுவத்தில், ராணுவ வீரராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கிருஷ்ணன்குட்டி-ராமாதேவி தம்பதிக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒருவரான கிருஷ்ணகுமாரி, கோவை அம்ரிதா விஸ்வ வித்யபீடம் பல்கலைக்கழகத்தில், பிஹெச்.டி ஆராய்ச்சி படித்துவந்தார்.

அம்ரிதா விஸ்வ வித்யாபீடம்
அம்ரிதா விஸ்வ வித்யாபீடம்
``இந்த தடவையும் பாஸ் ஆகலைன்னா!" - நீட் தேர்வு பயத்தால் சேலம் மாணவர் தற்கொலை!

சிறு வயது முதலே படிப்பில் சிறந்து விளங்கிய கிருஷ்ணகுமாரி, தனது பி.டெக், எம்.டெக் படிப்புகளை குஜராத்தில் முடித்திருக்கிறார்.

அப்போது தங்கப் பதக்கம் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். இதையடுத்து கடந்த ஐந்து ஆண்டுகளாக, கோவை அம்ரிதா பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் ஆராய்ச்சி மாணவியாக இருந்துவந்தார். கடந்த ஆண்டுகூட மத்திய அறிவியல் அமைச்சகத்தின் விருதைப் பெற்றிருந்தார்.

கிருஷ்ணகுமாரி விருது
கிருஷ்ணகுமாரி விருது

இப்படிப் பல பெருமைகளுக்கும் கனவுகளுக்கும் சொந்தக்காரராக இருந்த கிருஷ்ணகுமாரி, சனிக்கிழமை இரவு தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துக்கொண்டார். இதனால், அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து கிருஷ்ணகுமாரியின் உறவினர்கள் கூறுகையில், ``திறமைகள் இருந்தும் கிருஷ்ணகுமாரிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமலேயே இருந்துவந்தது. அவரின் பிஹெச்.டி வழிகாட்டி ராதிகா, கிருஷ்ணகுமாரியின் ஆராய்ச்சியைத் தொடர்ந்து நிராகரித்துவந்தார். `20 ஆண்டுகளானாலும் உன் ஆராய்ச்சி முடியாது. நீ தூக்கில் தொங்கு’ என்று கூறியிருக்கிறார்.

ஆராய்ச்சி மாணவி கிருஷ்ணகுமாரி
ஆராய்ச்சி மாணவி கிருஷ்ணகுமாரி

அதேபோல பல்கலைக்கழகத்திலுள்ள வேறு சில ஆசிரியர்களாலும் கிருஷ்ணாகுமாரிக்குத் துன்புறுத்தல் இருந்துவந்தது. அதனால்தான், அவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். அவரது மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கொல்லங்கோடு போலீஸார் விசாரித்துவருகின்றனர். இது குறித்து, `தமிழக கல்வித்துறை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எம்.எல்.ஏ பாபு கூறியிருக்கிறார். அதேநேரத்தில், ``மாணவி கிருஷ்ணகுமாரியிடம் நான் அப்படிச் சொல்லவில்லை.

ஆராய்ச்சி மாணவி கிருஷ்ணகுமாரி
ஆராய்ச்சி மாணவி கிருஷ்ணகுமாரி

எனக்கும் அவருக்கும், ஆசிரியர் மாணவி உறவுதான் இருந்துவந்தது. மற்றபடி வேறு எந்தப் பிரச்னையுமே இல்லை” என கிருஷ்ணகுமாரியின் வழிகாட்டி ராதிகா விளக்கம் அளித்திருக்கிறார்.

சென்னை: கஞ்சியில் விஷம்; கணவனைக் கொலை செய்த மனைவி! -ஆண் நண்பருடன் சிக்கியது எப்படி?

இது தொடர்பாக அம்ரிதா விஸ்வ வித்யபீடம் பல்கலைக்கழகம் மக்கள் தொடர்பு அதிகாரி பிரசாந்த் என்பவரைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். ``விடுமுறை முடிந்து இப்போதுதான் வந்திருக்கிறோம்.

கிருஷ்ணகுமாரி வீடு
கிருஷ்ணகுமாரி வீடு

இது குறித்து ஊடகங்கள் மூலமாகத்தான் தகவல் தெரிந்தது. பல்கலைக்கழக நிர்வாகத்திடமிருந்து அதிகாரபூர்வமாக பதில் வந்ததும் உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு