Published:Updated:

கோவை: ஏ.டி.எம் மையங்களில் முதியவர்கள் டார்கெட்; சிக்கிய உதவி ஒளிப்பதிவாளர்! - அதிர்ச்சிப் பின்னணி

கோவை ஏ.டி.எம் மையங்களுக்குச் செல்லும் முதியவர்களைக் குறிவைத்து பணம் பறித்துவந்த மோசடி நபர் கைதுசெய்யப்பட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கோவை ஏ.டி.எம் மையங்களில் முதியவர்கள் பணம் எடுக்கச் செல்லும்போது, ஒரு மர்ம ஆசாமி அவர்களைப் பின்தொடர்ந்து, அவர்களுக்கு உதவுவதுபோல நடித்து பணம் பறித்துவந்தார். அதன்படி ஏ.டி.எம் கார்டுகளின் ரகசியக் குறியீடு எண்களை முதியவர்களிடம் கேட்டு பணத்தை எடுத்துத் தருவதாகக் கூறி, அந்த ஏ.டி.எம் கார்டை வைத்துக்கொண்டு, அவர் கையில் கொண்டுவந்த ஒரு டம்மி ஏ.டி.எம் கார்டை கீழே போடுவார்.

கோவை
கோவை
`அந்த உறவை அவர் விடவில்லை..!' - கணவனை கொல்ல கூலிப்படையை ஏவிய கோவை பெண் கைது

பின்னர், ``இதில் பணத்தை எடுக்க முடியவில்லை" என்று கூறி டம்மி ஏ.டி.எம் கார்டை கையில் கொடுத்துவிட்டுச் செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறா.

இந்த நூதன மோசடி குறித்து ராமநாதபுரம், குனியமுத்தூர், போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான புகார்கள் குவிந்தன. இதையடுத்து அந்த மர்ம ஆசாமியைப் பிடிக்க ராமநாதபுரம் போலீஸ் குற்றப்பிரிவு  இன்ஸ்பெக்டர் பிரபாதேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தநிலையில், புலியகுளம் தாமுநகர் பகுதியில் ஜெயராஜ் என்பவரை கத்திமுனையில் மிரட்டி, அவரிடம் ரூ.1,000 மற்றும் ஏ.டி.எம் கார்டைப் பறித்த முகமது தம்பி என்ற மகி (33) என்ற இளைஞரை போலீஸார் கைதுசெய்தனர்.

முகமது தம்பி
முகமது தம்பி

அவரிடம் நடத்திய விசாரணையில் ஏராளமான ஏ.டி.எம் மையங்களில் முதியவர்கள், மூதாட்டிகளின் ஏ.டி.எம் கார்டுகளைப் பறித்து, பணத்தைத் திருடியதை ஒப்புக்கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முகமது தம்பியிடமிருந்து பத்து ஏ.டி.எம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான முகமது தம்பி, அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர். திருட்டைப் பிரதானமாகச் செய்தாலும், வெளி உலகுக்கு ஒளிப்பதிவாளர்போல காண்பித்துக்கொண்டு, தன்மேல் சந்தேகம் வராமல் இத்தனை நாள்களை ஓட்டியிருக்கிறார்.

கைது
கைது
representational image

`` `சித்திரை’, `செவ்வானம்’, `லாபம்’ ஆகிய படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருக்கிறேன். மேலும், குறும்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறேன்" என்று முகமது தம்பி போலீஸில் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு