Published:Updated:

நள்ளிரவில் ஓடும் ஆட்டோவில் பாலியல் தொந்தரவு; எகிறி குதித்து தப்பிய இளம்பெண்! - என்ன நடந்தது?

கோவை

ஓடும் ஆட்டோவில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டார்.

நள்ளிரவில் ஓடும் ஆட்டோவில் பாலியல் தொந்தரவு; எகிறி குதித்து தப்பிய இளம்பெண்! - என்ன நடந்தது?

ஓடும் ஆட்டோவில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டார்.

Published:Updated:
கோவை

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், கடந்த சில மாதங்களாக கோவை மாநகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியபடி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

கோவை
கோவை

இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்தப் பெண் பணி நிமித்தமாக திருப்பூர் சென்று, இரவு கோவை திரும்பியிருக்கிறார். நள்ளிரவு 12 மணியளவில் அவிநாசி சாலை ஹோப் காலேஜ் பகுதியில் இறங்கியிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிறகு தான் தங்கியிருக்கும் வீட்டுக்குச் செல்ல ரேபிடோ ஆப் மூலம் ஆட்டோ புக் செய்திருக்கிறார். சிறிது நேரத்தில் ஆட்டோ வர அந்த இளம்பெண், அதில் ஏறிச் சென்றிருக்கிறார். அங்கிருந்து புறப்பட்ட சிறிது நேரத்துக்குப் பிறகு, ஆட்டோ ஓட்டுநர் முகமது சாதிக் (43) அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார்.

பாலியல் தொந்தரவு
பாலியல் தொந்தரவு

சாதிக் தொடர்ந்து அத்துமீறவே, அந்தப் பெண் ஆட்டோவை நிறுத்துமாறு கூறியிருக்கிறார். ஆனால், அவர் ஆட்டோவை நிறுத்தாமல் சென்றிருக்கிறார்.

இதனால் ஒருகட்டத்தில் இளம்பெண் ஆட்டோவிலிருந்து வெளியே குதித்து தப்பித்திருக்கிறார். வெளியே குதித்ததில் காயமமைந்த பெண் தன் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். அவர்கள் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தினர்.

முகமது சாதிக்
முகமது சாதிக்

இது குறித்து அந்தப் பெண் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், முகமது சாதிக்கை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.