Published:Updated:

கோவை: லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை அதிகாரி... கையும் களவுமாகப் பிடித்த சி.பி.ஐ!

லஞ்சம்

கோவை நில உரிமையாளரிடம், லஞ்சம் வாங்கியபோது வருமான வரித்துறை துணை ஆணையர் உட்பட இருவரை சிபிஐ அதிகாரிகள் கைதுசெய்தனர்.

கோவை: லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை அதிகாரி... கையும் களவுமாகப் பிடித்த சி.பி.ஐ!

கோவை நில உரிமையாளரிடம், லஞ்சம் வாங்கியபோது வருமான வரித்துறை துணை ஆணையர் உட்பட இருவரை சிபிஐ அதிகாரிகள் கைதுசெய்தனர்.

Published:Updated:
லஞ்சம்

கோவை ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலதண்டபாணி. டிராவல்ஸ் நிறுவனம் நடத்திவருகிறார். ஆலாந்துறைப் பகுதியில் தன் விவசாய நிலத்தை, அவர் கடந்த 2013-ம் ஆண்டு விற்பனை செய்துள்ளார். 60 ஏக்கர் மதிப்புள்ள நிலத்தை ரூ.10 கோடிக்கு விற்றது தொடர்பாக, சில ஆண்டுகளுக்கு முன்பு பாலதண்டபாணி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டும் நடத்தியுள்ளனர்.

டேனியல் ராஜ்
டேனியல் ராஜ்

அப்போது, “அரசின் வழிகாட்டு முறையைப் பின்பற்றவில்லை. நிலத்தை விற்பனை செய்த பணத்துக்கு வருமான வரி செலுத்த வேண்டும்” என்று கோவை வருமான வரித்துறை துணை ஆணையர் டேனியல் ராஜ் கூறியுள்ளார்.

ஆனால், பாலதண்டபாணி தான் முறைப்படிதான் வரி செலுத்தியதாக பதில் அளித்துள்ளார். டேனியல் ராஜ் அவரைத் தன் அலுலகத்துக்கு வரவழைத்து, “முறையாக வரிகட்டுங்கள். இல்லையேல் எனக்கு ரூ.5 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இரண்டு தரப்பினரும் பேசி, ரூ.2.5 லட்சத்துக்கு உடன்பாடு ஆகியுள்ளனர்.

வருமான வரித்துறை
வருமான வரித்துறை

இதற்கு ஆடிட்டர் ஶ்ரீதரன் என்பவர் இடைத்தரகராகச் செயல்பட்டுள்ளார். இது குறித்து பாலதண்டபானி சி.பி.ஐ அதிகாரிகளிடம் புகார் அளித்தார். சி.பி.ஐ அறிவுறுத்தலின்பேரில் வருமான வரித்துறை அலுவலகத்துக்குச் சென்றார் பாலதண்டபாணி.

ரசாயனம் தடவிய ரூ.50 லட்சத்தை ரொக்கமாகவும், ரூ. 2 லட்சத்துக்கு காசோலையாகவும் டேனியலிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ அதிகாரிகள் டேனியலையும் ஸ்ரீதரனையும் கைதுசெய்தனர். டேனியல் தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகளிடம் கூறினார்.

கைது
கைது

இதனால், கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு சோதனை செய்தனர். அங்கு அவருக்கு உடல்நலக் குறைவு இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து இருவரையும் சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைதுசெய்யப்பட்ட இருவருக்கும் வருகின்ற ஏப்ரல் 6-ம் தேதிவரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. “டேனியல் மற்றும் ஶ்ரீதரன் சம்பந்தப்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.5.75 லட்சம் பணம், குற்றச்சாட்டுக்குள்ளான சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்று சி.பி.ஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.