Published:Updated:

'ஏன் கண்ணைப் பார்த்துப் பேச மாட்டேங்கறே' - மாணவியிடம் அத்துமீறிய அரசுக் கல்லூரிப் பேராசிரியர் கைது

மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கோவை அரசுக் கலைக் கல்லூரிப் பேராசிரியர் ரகுநாதன் கைதுசெய்யப்பட்டார்.

கோவை 12-ம் வகுப்பு படித்துவந்த மாணவி பாலியல் வன்கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி இன்னும் அடங்கவில்லை. அதற்குள் அடுத்த சம்பவம் நடந்துள்ளது. கோவை அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர் ரகுநாதன். இவர், மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரைத் தனது அறைக்கு அழைத்துப் பேசியிருக்கிறார்.

கோவை
கோவை
“இது தற்கொலை அல்ல... நிர்வாக கொலை!” - ‘சின்மயா’ மாணவி மரணம்... கொந்தளிக்கும் கோவை

அப்போது, ``ஏன் என் கண்ணைப் பார்த்து பேச மாட்டேகிறே" எனக் கூறி மாணவியிடம் தவறாக நடந்துகொண்டிருக்கிறார். உடனடியாக, மாணவி ரகுநாதனை எச்சரித்துவிட்டு அறையிலிருந்து வெளியேறியிருக்கிறார்.

அதன் பிறகும் கூட, ரகுநாதன் தனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. மாணவியைச் சந்திக்கும்போது, ``உன்னை தூக்கிச் சென்று கல்யாணம் செய்துவிடுவேன்” என்று சொல்லியிருக்கிறாராம். மேலும், ``இந்த விஷயத்தை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன்’’ என்றும் மாணவிக்குக் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.

முக்கியமாக, மாணவிக்கு வாட்ஸ்அப்பில் தொடர்ந்து அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்துவந்திருக்கிறார் ரகுநாதன்.

கைது
கைது

கொரோனா காரணமாக மாணவியால் இதை யாரிடமும் சொல்ல முடியவில்லை. கொரோனா, ஊரடங்கு முடிந்து கல்லூரி திறந்தவுடன் சக மாணவர்களிடம் ரகுநாதன் குறித்துக் கூறியிருக்கிறார். அப்போது ரகுநாதன், இதே மாதிரி மேலும் சில மாணவிகளிடம் அத்துமீறியது தெரியவந்தது.

இதனால்,பாதிக்கப்பட்ட மாணவி ரேஸ் கோர்ஸ் போலீஸில் புகார் அளித்தார். அதனடிப்படையில், வழக்கு பதிந்து, போலீஸார் பேராசிரியர் ரகுநாதனை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு