Published:Updated:

கோவை: எலியைக் கொல்ல விஷ மருந்து தடவிய கேரட்! - அறியாமல் சாப்பிட்ட கல்லூரி மாணவி மரணம்

மரணம் ( சித்திரிப்புப் படம் )

கோவை, நெகமம் அருகே பூச்சி மருந்து தடவிய கேரட்டைச் சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

கோவை: எலியைக் கொல்ல விஷ மருந்து தடவிய கேரட்! - அறியாமல் சாப்பிட்ட கல்லூரி மாணவி மரணம்

கோவை, நெகமம் அருகே பூச்சி மருந்து தடவிய கேரட்டைச் சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

Published:Updated:
மரணம் ( சித்திரிப்புப் படம் )

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள நெகமம் செட்டிக்காபாளையத்தைச் சேர்ந்த தம்பதி தேவசித்து – கிரேஷி அம்மாள். மளிகைக் கடை நடத்திவருகின்றனர். இவர்களின் மகள் எனிமா ஜாக்குலின் (19). கல்லூரியில் படித்துவருகிறார்.

எனிமா ஜாக்குலின்
எனிமா ஜாக்குலின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு தன் அம்மாவிடம் பசிக்கிறது என்று கூறியிருக்கிறார். அம்மாவும் நூடுல்ஸ் சமைத்துச் சாப்பிடுமாறு சொல்லியிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து, தங்கள் மளிகைக் கடைக்குச் சென்ற ஜாக்குலின் நூடுல்ஸ் பாக்கெட் மற்றும் சில கேரட்களை எடுத்து சமைத்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஒரு கேரட்டை சாப்பிட்டிருக்கிறார். சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்திருக்கிறார்.

கேரட்
கேரட்

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி ஜாக்குலின் பரிதாபமாக உயிரிழந்தார். மளிகைக் கடையில் எலித் தொல்லை அதிகமாக இருந்திருக்கிறது. இதன் காரணமாக கேரட்டில் விஷ மருந்து தெளித்துவைத்துள்ளனர்.

எலி
எலி
Pixabay

இது தெரியாத ஜாக்குலின் கேரட்டை எடுத்து சாப்பிட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து நெகமம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism